காயல்பட்டினத்தின் வட எல்லையில் உள்ள DCW தொழிற்சாலையினால் உள்ள ஆபத்துகள் குறித்து தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான உணர்வு செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 1 - 7, 2011 தேதியிட்ட இதழில் நகரில் பெருகிவரும் புற்றுநோய் நோயாளிகள், மரணங்கள், அதற்க்கான காரணங்களாக சந்தேகிக்கப்படுபவை, DCW தொழிற்ச்சாலை குறித்த அச்சங்கள் குறித்து - ஊரை உலுக்கும் உயிர்க்கொல்லிப்பிரச்சனை, சாகுபுரமா? - சாவுபுரமா? குந்தகம் விளைவிக்கும் குஜராத் கம்பெனி மற்றும் புற்று நோய் தொற்று நோய் இல்லை ... புதிர்களுக்கும் விடைகள் இல்லை ... என்ற தலைப்புகளில் - விரிவாக அலசப்பட்டுள்ளது. இரு பாகங்களாக வெளியிடப்படவுள்ள இச்செய்தி அடுத்தவாரமும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|