“சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்” என்ற தலைப்பின் கீழ் காயல்பட்டினம்.காம் வலைதளம் வெளியிட்டிருந்த தொகுப்புச் செய்திகளைக் கண்டித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் வாசகங்கள் பின்வருமாறு:-
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அன்பார்ந்த காயல் மாநகர பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சில தினங்களுக்கு முன் காயல்பட்டினம் டாட்காம் (kayalpatnam.com) என்ற இணையதளத்தில் சுனாமி குடியிருப்புகளும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் செய்திகள் வெளிவந்தது. இது சம்பந்தமாக கடந்த 27.03.2011 அன்று காலை 11 மணிக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் பேரவையின் வளாகத்தில் நடைபெற்றது. ஊரின் சில பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பல கருத்துக்களையும் பேசினார்கள். இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
***சுனாமி குடியிருப்புகளும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் வெளியான செய்திகளுக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
***பேரவைத் தலைவரிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் கற்பனையாக கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லி, வதந்திகளை பரப்பியதால் மக்கள் கவலையில் இருக்கின்றனர் என்பதை பேரவை உணர்கிறது.
***இதுபோன்ற பொய்ச் செய்திகளை முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பதோடு, இச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டுமென்றும் பேரவை கேட்டுக்கொள்கிறது.
***தவறான செய்திகளை வெளியிட்ட ஊடக நிர்வாகிகளை பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
***வதந்தியைப் பரப்பிய ஊடக நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து மறுப்பு வெளியிடுமாறு பேரவை கேட்டுக்கொள்கிறது.
***பேரவைத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் பேரவை சம்பந்தப்பட்ட எந்தச் செய்திகளையும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவை எச்சரிக்கிறது.
***நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை யாரும் புறக்கணிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று மக்களை வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
***பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
***இந்தச் செய்தியை கூடுதல், குறைவின்றி அப்படியே எல்லா ஊடகங்களிலும் வெளியிடுமாறு பேரவை பணிவோடு வேண்டுகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஹாஃபிழ் எஸ்.கே.சாலிஹ் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி மிஸ்கின் சாஹிப் (பாஸி), ஹாஜி வாவு அப்துல் கஃப்பார், ஹாஜி என்.எஸ்.நூகு ஹமீது (கம்பல்பக்ஸ்), ஹாஜி எஸ்.எம்.உஜைர், ஹாஜி எஸ்.ஏ.முஸ்தபா, ஹாஜி மெய்தீன் தம்பி, ஹாஜி வாவு நாசர், ஹாஜி மெய்தீன் தம்பி (துரை காக்கா), ஹாஜி செய்யது முஹம்மது அலி, ஹாஜி ஜரூக், ஹாஜி பிரபு தம்பி, ஹாஜி கலீல் (ஜெஸ்மின்), எம்.எல்.அப்துர் ரஷீது (அவ்லியா), எல்.எம்.இ.கைலானி, ஹாஜி பி.மி.மீரா சாஹிபு, ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.இஸ்ஹாக், ஹாஜி எஸ்.ஹைச்.மஹ்மூது நெய்னா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
எல்லாம்வல்ல இறைவனின் கிருபை நம் அனைவர் மீதும் என்றும் நிலவட்டுமாக ஆமீன்.
நன்றி. வஸ்ஸலாம்.
தங்கள் உண்மையுள்ள,
(ஒப்பம்)
ஹாஜி எம்.எம்.உவைஸ்,
தலைவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |