சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் எட்டு பாகங்களாக காயல்பட்டணம்.காம்
வெளியிட்ட ஆய்வு செய்தியில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் - முன்னர், பல்வேறு தேதிகளில் காயல்பட்டணம்.காம் செய்திகளாக
வெளியிட்டுள்ள நிகழ்வுகளே. அவைகள் ஆய்வு செய்திக்காக, கோர்வையாக, மார்ச் 24 முதல் 26 வரை மீண்டும் வெளியிடப்பட்டன.
ஐக்கிய பேரவை சார்பாக வெளியிடப்பட்டுள்ள மார்ச் 30 தேதியிட்ட அறிக்கையில் - தீர்மானங்கள் 1 - 5 வரை - காயல்பட்டணம்.காம் கற்பனை செய்து நடக்காத ஒரு விஷயத்தை பொய்யாக கூறியுள்ளதாகவும், வதந்திகளை பரப்புவதாகவும், அதற்காக
இணையதளம் வருத்தம் தெரிவித்து, மறுப்பு வெளியிடுமாறும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையில் காயல்பட்டணம்.காம் தவறாக
எசசெய்தியை வெளியிட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
மார்ச் 27 அன்று ஐக்கிய பேரவை சார்பாக நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட எஸ்.கே.ஸாலிஹ் கூறுகையில் - அக்கூட்டத்தில், சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும் - என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வு செய்தியின் பாகம் 1 மற்றும் பாகம் 2 இல் தெரிவிக்கப்பட்ட சில தகவல்களை குறிப்பிடப்பட்டதாக தெரிவித்தார். அவைகள் வருமாறு :-
பாகம் 1
... ஐக்கிய பேரவைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேர்தல் புறக்கணிப்பு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்த எந்த
கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றன ...
பாகம் 2
... மேலும் பெயர் சொல்லவிரும்பாத ஐக்கிய பேரவை நிர்வாகி ஒருவர் கூறுகையில் - குடியிருப்பு பிரச்சனையில் - நீதிமன்றத்தில் இடைக்கால
கட்டுமான தடை பெற அனிதா உதவியாக இருந்தார் என்று கூறினார் ...
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு தகவல்களையும் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு, ஐக்கிய பேரவையின் அன்றாட நிகழ்வுகளில்
கலந்துக்கொள்ளும் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார். அவ்வேளையில் - அம்மூத்த நிர்வாகி தன் பெயர் வெளியிடப்படக்கூடாது என
கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரின் பெயரை காயல்பட்டணம்.காம் வெளியிடவில்லை.
மார்ச் 27 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்திலும் எஸ்.கே. சாலிஹிடம் இது பற்றி வினவப்பட்ட போது - தகவல் தந்த ஐக்கிய பேரவை நிர்வாகி - தன் பெயரை
வெளியிடக்கூடாது என்று கூறியதால், அவர் பெயர் செய்தியில் குறிப்பிடப்படப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரின் சம்மதம் இல்லாமல், அவரின் பெயரை வெளியிடுவது சரியல்ல என்பதனை எஸ்.கே.ஸாலிஹ் தெளிவுபடுத்தினார்.
நேற்றிரவு ஐக்கிய பேரவை வெளியிட்ட அறிக்கையில் - காயல்பட்டணம்.காம் கற்பனையில் செய்தி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதை தொடர்ந்து - இணையதளத்திற்கு தகவல் தந்த ஐக்கிய பேரவையின் மூத்த நிர்வாகியும், ஒருங்கிணைப்பாளருமான சொளுக்கு எஸ்.எஸ்.எம். முத்து ஹாஜியை தொடர்பு கொண்டு - இணையதளத்தின் நம்பகத்தன்மையை அறிக்கை மூலம் ஐக்கிய பேரவை கேள்வி எழுப்பியுள்ளதால், அவரின் பெயரை வெளியிடவேண்டி உள்ளதை காயல்பட்டணம்.காம் தெரிவித்தது.
[பாகம் - 1] [பாகம் - 2]
[தொடரும்]
|