சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 58 வது செயற்குழுக் கூட்டம் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
புற்றுக்கு வைப்போம் முற்று குறுந்தகடு வெளிவர பாடுபட்ட அன்பர்களுக்கு,
நடைபெற்று முடிந்துள்ள ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்டம்:
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டம் மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சகோ. சட்னி எஸ். ஏ. செய்து மீரான் அவர்கள் (மன்ற அலுவலகம் ) இல்லத்தில் நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ் !
சகோ. குளம் அஹமது மெய்தீன் தலைமை தாங்கினார். சகோ. அரபி எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப் இறைமறை வசனங்களோடு கூட்டத்தைத் துவக்கி வைத்தார். சகோ. சட்னி எஸ். ஏ. செய்து மீரான் அனைவரையும் வரவேற்றார். புதியதாக செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து நடக்கும் முதல் அமர்வு எனபதால், அவர்களை வரவேற்றுப் பேசிய தலைவர் தனதுரையில், நாம் ஒன்றுப்பட்டு நகர மக்களுக்கு நல்லதை செய்யும்போது சில ஒழுங்கு முறையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் கூடிய மட்டும் தவறாது கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன நடக்கிறது என்பதை உற்றுநோக்கி ஆர்வமுடன் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
நிதி நிலை:
நாம் இது வரை வழங்கிய உதவிகள், கல்விக்காக நாம் வழங்க இருப்பவை, மன்றத்தின் தற்போதைய இருப்பு போன்ற விபரங்களை பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் துல்லியமாக சமர்ப்பித்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நம் மன்றம் செய்த பணிகளை அவருக்கே உரிய எளிய நடையில் சிறப்பாக எடுத்துரைத்தார் செயலர் சகோ. சட்னி செய்யித் மீரான். தொடர்ந்து செயலர் சகோ. எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், கடந்த நாட்களில் நாம் செய்த பணிகள், இனி நாம் எவ்வாறு செயல் படவேண்டும் என்பனவற்றை அழகுர கோடிட்டு காட்டினார்.
குறும்படம் :
"புற்றுக்கு வைப்போம் முற்று "என்ற தலைப்பில் வெளியான குறுந்தகடு, (documentary DVD)வெளிவர மிகுந்த சிரமப்பட்டு முன்னின்று தயாரித்த இம் மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலிக்கும், அக்குழு உறுபினர்களுக்கும், அதற்கு உறுதுணை புரிந்து ஒத்துழைத்த அத்துனை உள்ளங்களையும் இம்மன்றம் மனதார பாராட்டுகிறது.
குறுந்தகடு வெளீட்டு விழா!
குறுந்தகடு வெளீட்டு விழா அன்று சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சென்னை கேன்சர் கேர் சென்டரின் நிறுவனர் தலைவர் டாக்டர் அலெக்ஸ் எஸ்.ப்ரசாத், சென்னை ஹிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சுலைஹா, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் காயல் டாக்டர் டி.முஹம்மத் கிஷார் ஆகியோர்களையும், மற்றும் நகர பிரமுகர்களையும், சகோதர, சகோதரிகளையும், தாய்மார்களையும், இம்மன்றம் உள்ளம் திறந்து வெகுவாக பாராட்டுகிறது.
உலக காயல் மன்றங்கள் அனைத்தும், இந்த குறுந்தகடுதனை (DVD) பெற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை புற்று நோயாளிக்கு, அம்மன்றங்கள் பகிர்ந்தளிக்கலாமே என்றும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
புற்றுநோய் கணக்கெடுப்பு:
சஊதி அரபிய்யா காயல் நல மன்றங்களான ரியாத் காஹிர் பைத்துல்மால் , தம்மாம் காயல் நல மன்றம் , ஜித்தா காயல் நற்பணி மன்றம் அமைப்புகளின் ஏற்பாட்டில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் சமீபத்தில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மிகுந்த அக்கறையுடன் தகவல் சேகரிபினை (கேன்சர் சர்வே) செய்த பெண் சமுக ஆர்வலர்கள் அத்துனை பேருகளுக்கும், அவர்களுக்கு விளக்கம் தந்து உதவிய நம் நகர மக்களையும், மற்றும் இம்முயற்சிக்கு உறுதுணையாய் இருந்து செயல்ப்பட்ட இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ். கே. ஸாலிஹ், ஆசிரியர் அஹமது சுலைமான் இவர்களையும் இம்மன்றம் வெகுவாக பாராட்டுகிறது.
மருத்துவத்திற்காக:
மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை உபதலைவர் மருத்துவர் . எம்.ஏ.முஹம்மத் ஜியாத் அபூபக்கர் முன்னிலையில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, 5 நபர்களுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் உடல் நலனுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு:
அடுத்த செயற்குழு இன்ஷாஅல்லாஹ் வரும் மே 06ஆம் தேதி தலைவர். குளம் அஹமது மெய்தீன் இல்லத்தில் வைத்து நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகள் :
சகோதரர்கள். தோல்சாபு எம்.எல்.மொஹிதீன் அப்துல்காதர், கதீபு எம்.என். லெப்பைத் தம்பி, சொளுக்கு செய்து முஹமது சாஹிப் ஆகியோர் செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
சகோதரர்கள் சட்னி எஸ்.எ.முஹம்மது உமர் ஒலி, பொறியாளர் ஜி.எம்.முஹம்மத் சுலைமான், அனுசரணையுடன் உறுப்பினர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செயப்பட்டு இருந்தது. சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் நன்றி கூற சகோதரர் நூருதீன் நெய்னா துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல்,
எஸ்.ஹெச். அப்துல் காதர், ஜித்தா.
நிழற்படங்கள்,
முஹம்மது ஸாலிஹ், மக்கா.
|