காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசலில், முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா நிகழ்ச்சிகள் 01.04.2011 அன்று துவங்கி 04.04.2011 வரை நடைபெற்றது.
முதல் மூன்று நாட்களில் தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அன்றைய தினங்களில் தினமும் இரவு இஷா தொழுகைக்குப் பின் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
பன்னூல் ஆசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ துவக்க தினத்தன்றும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ இரண்டாம் நாளன்றும் சொற்பொழிவாற்றினர்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ கந்தூரி தினத்தன்று (நேற்று) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மறுநாள் 04.04.2011 (இன்று) அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
கந்தூரி வைபவ ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஜுவல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், செயலர் “முத்துச்சுடர்” ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, துணைச் செயலாளர் கோமான் மீரான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
கோமான் மீரான்,
துணைச் செயலாளர்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி,
கற்புடையார் பள்ளி வட்டம், காயல்பட்டினம். |