சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 39 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமையல் பொருட்களடங்கிய - ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்களை அம்மன்றத்தின் சார்பாக மஹ்மூத் லெப்பை, அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
2. ரன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[05 April 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3764
வழமை போல ரன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதான் உதவிகள். வாழ்த்துக்கள்.
சரிங்க.. எத்தனை நாளைக்கு தான் இப்படி சமையல் பொருளுதவி செய்வது. இலவசம் இலவசம் என்று கொடுத்து நம் மக்களை அப்படியே வைப்பதா. கொஞ்சம் அவர்களை கை தூக்கி விடலாமே.
உங்களின் ஆண்டறிக்கையில் "2015ஆம் ஆண்டிற்குள் 100 காயலர்களை சிங்கையில் வேலைவாய்ப்பு பெறச் செய்வதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" - இந்த திட்டத்தில் நம் ஊரில் உள்ள ஏழை குடும்பத்து உறுப்பினர்களை தேர்வு செய்யுங்களேன். இந்த நூறு ஆயிரம் ஆகும். இனி இலவசம் யாருக்கும் தேவை இல்லாமல் போகுமே.
மற்ற நலமன்றங்களையும் ஒருங்கினைத்து புது திட்டங்கள் வகுத்து வறுமையை ஒழிக்க உங்களாலும் முடியும். நிராதரவான குடும்பங்களுக்கு அவர்களாகவே சம்பாதிக்க வழி உண்டாக்கி கொடுக்கலாம். இது தானே "மீன் பிடிக்க கத்து கொடுப்பது".
இன்ஷா அல்லாஹ் வறுமை இல்லாத, நோய்கள் இல்லாத, சந்தோசமான காயல் உருவாகட்டும், நம் சந்ததியர்களுக்கு.
3. மாஷா அல்லாஹ் posted byKM Abdul Hadhi(Eta) (Jeddah (Ksa))[05 April 2011] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3766
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 39 ஏழைக்குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்கப்பட்டுள்ளது மாஷா அல்லாஹ், தொடரட்டும் உங்கள் சமூக தொண்டுகள்..
NICE TO KNOWN THESE KIND OF CONTRIBUTIONS FOR NEEDY PERSONS. MAY ALLAH WILL BE HIGHLY SUPPORTED TO THEIR LIFE IN DUNYA AND AHIRA, THOSE WHO ARRANGED AND GIVEN MONEY FOR THESE EVENTS. (SADAKATHU ZARIYA)
6. கொஞ்சம் கவனம் தேவை posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[07 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3811
சகோ. சூப்பர் இப்ராகிம் அவர்களின் பாராட்டு கமெண்ட்ஸ் நன்றாக உள்ளது. நன்றிகள் உங்களின் துஆ விற்கு..
ஒரு சிறிய திருத்தம், இந்த உதவி "சதக்கத்துல் ஜாரியாவில்" வராது சகோதரரே.... கொஞ்சம் கவனம் தேவை மார்க்க விசயத்தில். சிறிய தவறு வந்தாலும் நச் என்று பிடித்துக்கொள்வார்கள் நம் சகோதரர்கள்..
7. வாழ்த்துக்கள் . posted byvsm ali (kangxi, Jiangmen, China)[07 April 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 3815
வாழ்த்துக்கள் . சிங்கப்பூர் ஹசன் காக்காவின் தலைமையில் நடக்கும் இது போன்ற சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். இருப்பினும், சில நாட்கள் வயிற்ருப்பசியை போக்கும் இந்த காரியங்களைவிட, காலம் பூராவும் ஏழை மக்களின் வயிற்ருப்பசியை போக்க, வேறு நல்ல திட்டங்களையும் செயல் படுத்தலாமே!
திறமையான எளிய மக்களை கண்டறிந்து, சிறு தொழில் செய்ய உதவலாம். ( tailoring , food grain package etc .) அடுத்து வரும் கல்வி ஆண்டில், எளிய மாணவரை இனம் கண்டு, வேலை உத்திரவாதம் உள்ள கல்லூரிப்படிப்பிர்க்கு sponser செய்யலாம்.
ஹசன் காக்கா இதையும் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
8. இத.. இத... இதை தான் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[07 April 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3816
அன்பு சகோ.VSM அலி அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி. இத.. இத... இதை தான் அனைவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இது தான் "மீன் பிடிக்க கத்துக்கொடுக்கும் வழி".
ஏற்கனவே ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் காக்கா, சகோதரர்கள் ரஷீத் ஜமான், அபூ முஹம்மத் உதுமான், எம்.எம்.மொகுதூம் முஹம்மத் மற்றும் பலர் பல சிட்டிங்கள் இது பற்றி விவாதித்து இருப்பார்கள். கூடிய சீக்கிரம் பல அதிரடி நல திட்டங்கள் வரும் பாருங்க.
நாமளும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, நல்ல ஊக்கமூட்டி, மனதுவிட்டு பாராட்டி, இறைவனிடம் துஆ வும் கேளுங்கள்.
நம்ம சமுதாயம் நன்றாக இருப்பதை நம் காலத்தில் நம் கண்கொண்டு பார்க்கலாம் அல்லவா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross