காயல்பட்டினத்தின் வடபுறம் உள்ள DCW தொழிற்ச்சாலை தான் தயாரிக்கும் சில பொருட்களின் உற்பத்தி அளவை அதிகரிக்க மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. இதற்க்கான விண்ணப்பத்தினை அது கடந்த அக்டோபர் 27, 2010 இல் தாக்கல் செய்துள்ளது. அது குறித்த விசாரணை ஜனவரி 20, 2011 அன்று புது டில்லியில் நடைபெற்றுள்ளது.
DCW சமர்ப்பித்துள்ள திட்டப்படி Trichloroethylene உற்பத்தி அளவு 7,200 MTPA இல் இருந்து 15,480 MTPA ஆக உயர்த்தப்படும். மேலும் PVC உற்பத்தி 90,000 MTPA இல் இருந்து 150,000 MTPA ஆக உயர்த்தப்படும்.
DCW நிறுவனம் டிசம்பர் மாதம் பிரெஞ்சு நிறுவனம் Arkema வுடன் CPVC தயாரிக்க ஒப்பந்தம் செய்தது நினைவிருக்கலாம். தனது விண்ணப்பத்தில் CPVC உற்பத்தி 14,400 MTPA இருக்கும் என DCW தெரிவித்துள்ளது.
தற்போது நிலக்கரிக்கொண்டு சாஹுபுர வளாகத்தில் 58.27MW அளவு மின்சாரம் DCW உற்பத்தி செய்துவருகிறது. அதனை 108.27 MW ஆக உயர்த்த DCW விண்ணப்பித்துள்ளது.
இது குறித்த ஆவணங்களை காண இங்கு அழுத்தவும்
தகவல்:
www.dcwmonitor.com
|