ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்கு அம்மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் (KWAUK) பொதுக்குழுக் கூட்டம் 30.04.2011 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை Northamptonஇல்,
Old Village Hall,
Charles Close,
Old,
Northants
NN6 9RQ
என்ற முகவரியில் நடைபெறுகிறது.
நமதமைப்புக்கான சட்ட விதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள முன்வடிவு குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உறுப்பினர்களின் விலைமதிக்க முடியாத நேரத்தை சரியான முறையில் கையாளும் பொருட்டு, சட்டவிதிகள் முன்வடிவு அனைத்து உறுப்பினர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அதிலுள்ள நிறை-குறைகளை அலசி ஆராய்ந்து, மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அது வாசிக்கப்படும்போது, சேர்க்க வேண்டிய - நீக்க வேண்டிய வாசகங்கள் குறித்து தெரிவித்தால், அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் அதன்பேரில் மேற்கொள்ளப்படும்.
மேலும் இக்கூட்டத்தை வெறும் கூட்டமாக மட்டும் நடத்தாமல், ஐக்கிய ராஜ்ஜிய காயலர்களின் “குடும்ப தினமாக” நடத்தவும், கூட்டத்தையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை உறுப்பினர்களுக்காக - குறிப்பாக குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் இயன்ற வரை தமது அனைத்து வேலைகளையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திட சில வழிகாட்டுதல்கள்:-
***பொதுக்குழுவுக்கு முந்திய இரவில் சீக்கிரமாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்...
***மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு உற்சாகத்துடன் உரிய நேரத்தில் ஆயத்தமாகுங்கள்...
***காலைக் கடமைகளை நிறைவாக முடித்த பின், முற்கூட்டியே வீட்டை விட்டுப் புறப்படுங்கள்...
***வாகனத்தை பாதுகாப்புடன் ஓட்டுங்கள்...
***கூட்டம் நடைபெறுமிடத்திற்கு குறித்த நேரத்தில் வருகை தந்து அனைவரையும் மகிழச் செய்யுங்கள்...
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
அழைப்பறிக்கையின் ஆங்கில ஆக்கம் பின்வருமாறு:-
Dear Kayalites, Assalamualaikum WRBH.
This is to remind you of the meeting scheduled for April 30, 2011 in Northampton.
Time:
11.00 A.M to 05.00 P.M.
Venue:
Old Village Hall
Charles Close,
Old,
Northants
NN6 9RQ
http://www.oldvillagehall.org.uk
We wish to bring to your notice that this will be a Special General Meeting (SGM) as we are intending to adopt a Constitution for KWAUK. It is therefore important that as many members as possible attend. We are also endeavouring to make this a Family day out with recreational activities, especially for the benefit of children. Hence we request you most humbly to be punctual with attendance to make this dual event a success.
In due course we will forward a copy of the Draft Constitution for your perusal so that valuable time can be saved at the meeting. As the Constitution is read it will be adopted. If there be objection to inclusion of any clauses then they will be discussed at the end of reading. Any additions may be made at the same time.
TIP FOR SUCCESS OF THE EVENT
***RETIRE EARLY THE NIGHT BEFORE...
***WAKE UP FOR FAJR...
***LEAVE HOME EARLY...
***DRIVE SAFELY...
***ARRIVE IN TIME TO DELIGHT EVERYONE
இவ்வாறு ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |