தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரான பி.ஆர்.மனோகரனை ஆதரித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் 07.04.2011 (நேற்று) இரவு 08.00 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலும், பேருந்து நிலையத்திற்கருகிலும் பரப்புரை செய்தார்.
திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து விலாவாரியாக பட்டியலிட்டுப் பேசிய அவர், மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வரும் மின்தடை குறித்து பேசிக்கொண்டிருந்தார். சரியாக அந்நேரத்தில் ஏற்பட்ட மின்தடை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.
மின்தடை ஏற்பட்டதும், “பார்த்தீங்களா...? நான் இப்பதான் சொல்லிட்டு இருக்கேன்... அதுக்குள்ள எவ்வளவு கஷ்டம் தர்றாங்க....? புரட்சித்தலைவி அம்மா ஆட்சி வந்தால் இது இருக்காது!” என்றார்.
நகர அதிமுக செயலாளர் காசிம், ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர் உட்பட பலர் உடனிருந்த இப்பரப்புரைக் கூட்டத்தில், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|