தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான பி.ஆர்.மனோகரனுக்கு ஆதரவாக, அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட நிகழ்வுகளில், குணங்குடி ஹனீஃபா கலந்துகொண்டு பரப்புரை செய்தார்.
காயல்பட்டினம் பேருந்து நிலையம், அரூஸிய்யா பள்ளிவாசல் அருகில் மற்றும் சீதக்காதி திடலில் அவர் உரையாற்றினார். பின்னர் அவருடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அங்கத்தினர் நகரின் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்வுகளில் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ்.ஆஸாத், மமக மாவட்டச் செயலாளர் பீரப்பா மற்றும் தமுமுக, மமக நகர நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|