தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் தொகுதி முழுக்க பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் தேர்தல் பரப்புரை செய்த ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, அதன் நிர்வாகிகளான மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் பாக்கவீ, மவ்லவீ அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ, மவ்லவீ சுலைமான் சேட் ஆகியோர், நேற்றிரவு காயல்பட்டினம் பிரதான வீதியில் பரப்புரை செய்தனர்.
இன்று காலையிலிருந்து அவர்கள் நகரின் பல உட்பகுதிகளிலும் தெருமுனைப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். காயல்பட்டினம் தீவுத்தெருவில் இன்று காலை 11.00 மணிக்கு அவர்கள் பரப்புரை செய்தனர். தி.மு.க. நகர நிர்வாகி கவிஞர் எஸ்.செய்யிதஹ்மத், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ மற்றும் பலர் அப்போது உடனிருந்தனர்.
|