Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:41:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5945
#KOTW5945
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 8, 2011
தேர்தல் 2011: இரவு நேரங்களில் மின்வெட்டு கூடாது! தேர்தல் ஆணையம் உத்தரவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2598 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வாக்குப்பதிவு முடிவடையும் தேதி (13.04.2011) வரை இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை காரணமாக, சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மின்சாரத் தேவையை சமாளிக்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்த மின்வெட்டு முறை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது இரவு நேரங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு இருளில் பணம் வினியோகம் செய்வதற்காகவே மின்சாரம் நிறுத்தப்பட்டதாக பல்வேறு கட்சிகளும் புகார் எழுப்பின.

அந்தச் சூழ்நிலையில் மின்வெட்டு குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. மின்சார வாரியத்திடம் விளக்கம் கேட்டது. அதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கையை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவங்களை வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியே, தமிழகத்தில் இரவு மின்வெட்டு செய்யக்கூடாது என்பதாகும்.

இது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்கள் நடைபெறலாம்.

குறிப்பாக, இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணம் அளிக்கப்படக் கூடும் என தகவல்கள் வந்துள்ளன. எனவே, வாக்குப்பதிவு தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக - அதாவது, வரும் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் இரவில் மின்சாரம் தடைபடக் கூடாது என மின்சார வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது”
என தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் தேர்வு நேரம் என்பதால் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளோம்...

சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பகல் நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் இப்போது உத்தரவை வெளியிட்டுள்ளது. வேறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும் என ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”
என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள்: 07.04.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. power cut at night
posted by meera sahib (kayalpatnam) [08 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3840

Assalamu alaikkum

what happened to election commission order not to cut power at night???????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. 20 முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [09 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3849

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தேர்தல் ஆணையம் போடக்கூடிய உத்தரவு ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தை கட்டுப்படுத்தாது என்று நினைக்கிறோம். ஏனென்றால் (அவர்களே போடக்கூடிய ) அட்டவணைப்படி அவர்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. இதிலே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நடப்பதற்கு அவர்கள் என்ன அடிமைகளா?.

சென்ற மாதம் " மாதாந்திர பராமரிப்பிற்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் நாள் " என்று 3 முறை ( 22 ; 24 மற்றும் 26 ) தேதிகளை மாற்றி விநியோகத்தை நிறுத்தாமல் கடைசியாக மார்ச் 31 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஏன் அட்டவணைப்படி மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை ? என்று கேட்டால் அதற்கு தகுந்த காரணம் இருக்காது.

ஆனால் அதற்கு மக்கள் சொல்லும் காரணம் கிரிக்கெட் விளையாட்டு நடைபெறுவதால் நிறுத்தவில்லை என்று. அது உண்மையாக இருக்கும் என்றால் நிச்சயமாக அதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களே.

பள்ளிக்கூடங்களிலே தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது , மாணவர்களுடைய தேர்வுக்கு மதிப்பு இல்லை. ஆனால் விளையாட்டு முக்கியமாகிவிட்டது.

----------------------------------------------------------

மேலும் பகல் நேரத்தில் 2 மணி நேரங்கள்தான் மின் விநியோகம் நிறுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளே உத்தரவு பிரப்பித்திருக்கும்போது நமது ஊரிலே பெரும்பாலும் 3 மணி நேரங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இன்று சனிக்கிழமை காலையில்கூட 3 மணி நேரங்கள் ( 6 - 9 ) மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 9 நாட்களே ஆகின்றன இதுவரை குறைந்தது 20 முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சொன்னால் ஏப்ரல் 1 ஆம் தேதி 4 முறையும்; 5 ஆம் தேதி 5 முறையும்; 6 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி தலா 3 முறைகளும் மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

---------------------------------------------------------

இதற்கெல்லாம் காரணம் தகுதியற்றவர்கள் பதவியில் இருப்பதுதான். எங்கு தகுதி உள்ளவர்கள் பணியாற்றுகிறார்களோ அங்கு குறை காணமுடியாது. குறை காண்பின் அதற்கு தகுந்த காரணம் இருக்கும்.

தகுதி உள்ளவர்கள் பணியாற்றி மக்கள் நலமாக வாழ இறைவன் அருள்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
திடீர் மழை  (10/4/2011) [Views - 2598; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved