சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் - தேர்தல்கள் குறித்த சட்டத்தின் 49-O பிரிவு குறித்த விளக்கத்தினை மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கும்படி ஆணையிட்டது. அதன் தொடர்ச்சியாக - இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் The Hindu மற்றும் தினகரன் நாளிதழ்களில் இது குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்ற்றல்
தமிழக சட்டமன்றப்பேரவைத் தேர்தல் 2011
TENDERED VOTE
உங்கள் வாக்கை வேறு எவரேனும் தவறுதலாக செலுத்தி இருந்தால், நீங்கள் உண்மையான வாக்காளர் என்பது நிரூபணமானால், நீங்கள் டெண்டர்ட் பேலட் பேப்பர் (Tendered Ballot Paper) மூலம் வாக்கு அளிக்கலாம். வாக்குச்சாவடி அலுவலரிடமிருந்து டெண்டர்ட் பேலட் பேப்பரை பெற்று உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள். உங்கள் வாக்கின் ரகசியத்தன்மை காக்கப்படும்.
49-O
நீங்கள் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 'வாக்களிக்க விருப்பமில்லை / 49-O' என்று எழுதி கையொப்பமிட்டால் மட்டும் போதும். இது கள்ள ஒட்டு போடுவதை தடுக்கும். 49-O க்கு தனி படிவமோ, விண்ணப்பமோ அளிக்க அவசியமில்லை.
மக்களாட்சிக்கு வாக்களிப்போம் ... மனசாட்சிப்படி வாக்களிப்போம் ...
வெளியீடு:
தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், தமிழ் நாடு.
|