தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில், இயலாநிலை வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஓர் உதவியாளர் உடன் வர அனுமதிக்கப்படுவார் எனவும், பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ப்ரெய்லி வார்ப்பு சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வாக்குப்பதிவின்போது கண் பார்வையின்மை அல்லது உடல் ஊனம் காரணமாக வாக்களிக்க இயலாதவர்கள் உடன் ஓர் உதவியாளரை அழைத்து வரலாம். அவரிடம் உறுதிமொழி படிவத்தில் (ரகசியம் காப்பதாகவும், வேறு யாருக்கும் அவர் உதவியாளராக இல்லை எனவும்) கையொப்பம் பெற்று அனுமதிக்கலாம். அவர் பதினெட்டு வயது நிரம்பியவராகவும், வேறு யாருக்கும் உதவியாளராக செல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
உதவியாளர் உறுதிமொழி இணைப்பு XIIஇல் பெற வேண்டும். படிவம் 14Aவில் பதிவு செய்ய வேண்டும். ஓர் உதவியாளர் ஒரு பார்வையற்ற வாக்காளருக்கு மட்டுமே உதவ வேண்டும்.
ப்ரெய்லி (braily) முறைப்படி தயாரிக்கப்பட்ட டம்மி வார்ப்புச் சீட்டை presiding officer பார்வையற்ற வாக்காளரிடம் வழங்க வேண்டும். வாக்குப்பதிவு செய்த பின்னர் அந்த டம்மி வாக்குச் சீட்டினை திரும்பப் பெற வேண்டும். பார்வையற்றோர் விரும்பினால் ப்ரெய்லி டம்மி வாக்குச் சீட்டு பதிவு செய்யவும் உதவியாளரை அனுமதிக்கலாம்.
மாற்றுத் திறனாளிகளில் தானாக நடக்க முடியாத மற்றும் நிற்க முடியாதவர்களுக்கும் ஓர் உதவியாளர் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |