சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் சார்பில் பல்வேறு தேவைகளுக்காக காயல்பட்டினத்தைச் சார்ந்த நலிந்தோருக்கு எழுபத்து நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..
எமது ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் 23ஆவது செயற்குழுக் கூட்டம் 03.03.2011 வியாழன் பின்னிரவு 08.00 மணிக்கு, ஜனாப் ஹாஜி ஏ.டி.ஸூஃபீ அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ தலைமை தாங்கினார். உறுப்பினர்களின் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு:
மார்ச் மாதம் நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம், தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தீர்மானம் 02 – புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்பில் உதவிய உள்ளங்களுக்கு நன்றி:
சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களான ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து, காயல்பட்டினம் நகரில் புற்றுநோயின் பாதிப்பு குறித்த தகவல்களை சேகரித்திட கணக்கெடுப்பு (கேன்சர் சர்வே) நடத்தின.
இக்கணக்கெடுப்புப் பணிகளை பல்வேறு சிரமங்களுகிடையிலும் சிறப்பாக செய்து முடித்த இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும், கணக்கெடுப்புக்கான ஏற்பாட்டுப் பணிகளை முனைப்புடன் செயல்படுத்திய சகோதரர் ஏ.தர்வேஷ் முஹம்மத், ஆசிரியர் அஹ்மத் சுலைமான், சகோதரர் ஸாலிஹ் உள்ளிட்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் எமதமைப்பு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
சஊதியிலிருந்தவாறு சர்வே பற்றிய அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி ஒருங்கிணைத்த சகோதரர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி..அபூபக்கர் அவர்களுக்கும், ஜித்தா மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றங்களின் பிரதிநிகளுக்கும் எம் மன்றம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 03 - நலத்திட்ட உதவிகள்:
பல்வேறு உதவிகள் கோரி நமதூர் ஏழை மக்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் பரிவுடன் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கீழ்க்கண்டவாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று தாரளமாக உதவிய அன்புச் சகோதரர்களுக்கும் மன்றம் நன்றிகளைத் தெரிவிக்கிறது.
***சமுதாய கல்லூரியில் தையற்கலை படிப்பு (DFD) முடிக்க ஒரு சகோதரிக்கு ரூபாய் 6,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
***தீ மற்றும் பாதுகாப்பு பட்டயபடிப்பு (Fire & Industrial Safety Engineering) இறுதி ஆண்டு படிக்கும் மாணவருக்கு ரூபாய் 15,000 கடனுதவியாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
***எம்.பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் ஒரு மாணவருக்கு ரூபாய் 25,000 (இதில் 15,000ரூபாய் கடனுதவி) வழங்க தீர்மானிக்கப்பட்டது.
***அவசர மருத்துவ உதவியாக ஒரு சிறுவனுக்கு ரூபாய் 10,000.00 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
***Cancer Fact Finding Committee - CFFC நடத்தும் அனைத்து பரிசோதனை வகைகளுக்காக மேலும் ரூபாய் 18,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட நிறைவு:
கூட்டத்தின் நிறைவில் சூடான காயல் பக்கோடா, கஞ்சி பரிமாறப்பட்டது. இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூற, இறையருளால் இனிதாய் நிறைவுற்றது எமது செயற்குழுக் கூட்டம், அல்ஹம்துலில்லாஹ்!
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.முஹம்மத் லெப்பை,
துணைச் செயலாளர்,
காஹிர் பைத்துல்மால்,
ரியாத், சஊதி அரபிய்யா. |