தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால், வாக்குச்சாவடிகளில் “49ஓ” பயன்படுத்தலாம் என்ற முறை உள்ளது. இந்த முறையை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டுமென்று கோரி, சத்திய சந்திரன் என்ற வழக்குறைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றுமு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இதுகுறித்து தேர்தல் ஆணைத்திடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
தமிழகத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 17ஏ படிவம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்படிவத்தில் பதிவு செய்வதன் மூலம் தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையத்தின் வழக்குறைஞர் ஜி.ராஜகோபாலன் அப்போது தெரிவித்தார்.
அதனையடுத்து, பொதுமக்கள் அதிகம் படிக்கும் இரண்டு தமிழ் நாளிதழ்களிலும், இரண்டு ஆங்கில நாளிதழ்களிலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துமாறு நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. |