ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில், காயல்பட்டினம் நகரின் அனைத்து முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ளும் வகையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் “உணர்வாய் உன்னை” என்ற தலைப்பில், உளத்தூய்மைக்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
“உணர்வாய் உன்னை” நிகழ்ச்சி குறித்து நாம் ஏற்கனவே அறிவித்தது தாங்கள் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ், நிறைய காயலர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.
இன்னும் அதிகமான பேர் பலனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் முன்பதிவு செய்யும் கடைசி தேதியை 06.04.2011 வரை நீட்டித்துள்ளோம்.
இதுவரை முன்பதிவு செய்யாத சகோதரர்கள் உடனடியாக முன்பதிவு செய்து இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹு ஃகைர். நன்றி. வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |