இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பிரிவின் இரவு நேர நிகழ்ச்சிகள் இந்திய கடலோரப் பகுதிகள் வரை கேட்கும் வகையில் ஒலிபரப்பு வீச்செல்லை சோதனை அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒலிபரப்பு குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்காக அதன் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய ஆலோசகருமான அல்ஹாஜ் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் இம்மாதம் 15ஆம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை மண்ணடி, 217-லிங்கிச்செட்டித் தெரு என்ற முகவரியில் அமைந்துள்ள ஹாஜரா ட்ரேடர்ஸ் நிறுவனத்தில் அன்றைய தினம் அவர் முகாமிடுவதாகவும், அம்முகவரியில் அன்றைய தினம் அவரிடம் நேரடியாகவோ அல்லது +91 94430 05368 என்ற அவரது கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு கருத்து தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
O.L.M.ஆரிஃப்,
கொழும்பு, இலங்கை. |