கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் தற்காலிக முடிவுகள் வியாழன் அன்று (மார்ச் 31) வெளியிடப்பட்டன. அதனை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் இந்திய பதிவு துறை தலைவர் சி.சந்திரமௌலி ஆகியோர் வெளியிட்டனர். வெளியிடப்பட்ட முடிவுகளின் முக்கிய அம்சங்களை தொடராக காண்போம்:
2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1210.19 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதில் ஆண்கள் 623.72 மில்லியன் (51.54%)
இதில் பெண்கள் 586.46 மில்லியன் (48.46%)
2001 ஆம் ஆண்டு இருந்த இந்திய மக்கள் தொகையைவிட இது 181 மில்லியன் அதிகமாகும்.
கடந்த பத்தாண்டில் மொத்த வளர்ச்சி: 17.64 %
ஆண்களின் வளர்ச்சி: 17.19 %
பெண்களின் வளர்ச்சி: 18.12 %
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுக்க துவங்கியதில் இருந்து - 1911 - 1921 காலக்கட்டத்தினை தவிர்த்து - கடந்த பத்தாண்டின் (2001 - 2011) மக்கள் தொகை வளர்ச்சியே குறைவானது.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர் பிரதேஷ் மாநிலம் - 199.5 மில்லியன் மக்களுடன் - தொடர்கிறது. 112 மில்லியன் மக்களுடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross