காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜி. பயின்று முடித்துள்ள மாணவ-மாணவியர் முதல் வகுப்பில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் நடப்பாண்டின் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 31.03.2011 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளி முதல்வர் எம்.செண்பகவல்லி விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஆசிரியை கவுதமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், விடுமுறைக் காலங்களில் குழந்தைகளை பெற்றோர் கவனிக்க வேண்டிய முறைமைகள், அவர்களுக்குப் பிடித்தமான அளவில் பொழுதுபோக்கு அம்சங்களை அளித்து பக்குவமாக அவர்களை வழிநடத்தும் முறை உள்ளிட்டவை குறித்து பள்ளி முதல்வரும் விழா தலைவருமான எம்.செண்பகவல்லி உரையாற்றி, மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இறுதியாக ஆசிரியை பெனார்சிலின் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. பள்ளியின் மழலையர் பிரிவு பொறுப்பாசிரியை எஸ்.ஏ.டி.முஹம்மத் ஆஸியா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். |