காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வெளியிடப்பட்ட மார்ச் 30 தேதியிட்ட அறிக்கையின்
தீர்மானம் எண் 7 பின் வருமாறு அமைந்துள்ளது:
நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை யாரும் புறக்கணிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தேர்தலை புறக்கணிக்க
வேண்டுமென்று மக்களை வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
காயல்பட்டணம்.காம் தேர்தலை புறக்கணிக்க என்றும், யாரையும், எங்கேயும் வற்புறுத்தவில்லை. ஜனவரி
4 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம், தேர்தலை காயல்பட்டின மக்கள் புறக்கணிக்கும் சூழல் ஏற்படும்
என்று ஐக்கிய பேரவை தான் அரசினை எச்சரித்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - இது குறித்த ஐக்கிய பேரவையின் தற்போதைய நிலை - ஏன் முறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வியை மட்டுமே இணையதளம் எழுப்பியது.
இறுதியாக, ஐக்கிய பேரவை சார்பில் வெளியிடப்பட்ட மார்ச் 30 அறிக்கையின் தீர்மானம் எண் 6 இல்
பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
பேரவைத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் பேரவை சம்பந்தப்பட்ட எந்தச் செய்திகளையும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவை எச்சரிக்கிறது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை என்பது காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளின் / ஜமாஅத் மக்களின் கூட்டமைப்பாக
உருவாக்கப்பட்ட பொது அமைப்பாகும்.
மே 21, 2001 அன்று எல்.கே. மேல் நிலைப்பள்ளியில் - ஹாஜி பி.மஹ்மூத் தலைமையில் - நடந்த
நிகழ்ச்சியில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை துவக்கப்பட்ட செய்தி முதல் - இது நாள் வரை, காயல்பட்டணம்.காம் ஐக்கிய பேரவை
குறித்த செய்திகளை, எவ்வாறு ஐக்கிய பேரவையால் தரப்படுகிறதோ அவ்வாறே வெளியிட்டு வருகிறது.
ஆனால் எச்சூழலிலும் பொதுமக்களின் அமைப்பான ஐக்கிய பேரவையின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை ஊடகங்கள் - ஐக்கிய பேரவையின் ஒப்புதல் இன்றி - எழுப்பக்கூடாது என்று எச்சரித்திருப்பது விநோதமாக உள்ளது. அந்த நிர்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் எந்த ஊடகமும் - தொடர்ந்து செயலாற்ற தகுதி இல்லாதது என்பதே காயல்பட்டணம்.காமின் நிலை ஆகும்.
[பாகம் - 1] [பாகம் - 2] [பாகம் - 3]
[முற்றும்] |