தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது. வழமைக்கு மாற்றமாக, நடப்பு தேர்தலையொட்டி பல்வேறு சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக, தேர்தல் குறித்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்ப தடை விதித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கேபிள் தொலைக்காட்சிகளில் அரசியில் கட்சிகளின் சார்பில் தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதில் பல்வேறு பாகுபாடும், வேறுபாடும் ஏற்படுவதாலும் கேபிள் தொலைக்காட்சிகள் குறித்து பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி 14.04.2011 மாலை 05.00 மணி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து கேபிள் தொலைக்காட்சிகளும் தேர்தல் தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் உடனடியாக தடை விதிக்கப்படுகிறது என்று அந்த செய்தியறிக்கையில் மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாணையை மீறி தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியீடும் கேபிள் தொலைக்காட்சிகளின் நிறுவனத்தின் மீது தேர்தல் விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி. |