துபாயில் இஸ்லாமியப் பார்வையில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் - உணர்வாய் உன்னை - வரும் ஏப்ரல் 8 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இது குறித்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாள் : 08.04.2011, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், அல் நஹ்தா, துபாய் (Central School, Al Nahda)
நடத்துபவர் : சகோ. ஜலாலுத்தீன் (அபுதாபியில் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சியை நடத்தியவர்)
எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை (அல் குர்ஆன் 13:11)
தூய்மையடைந்தவன் நிச்சயம் வெற்றி பெற்று விட்டான் (அல் குர்ஆன் 87:14)
பயிற்சி முகாமின் நோக்கங்கள்:
-- நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுதல்
-- கோபம், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுதல்
-- நம்மைச் சுற்றியிருப்பவர்களுடன் அன்பாகப் பழகுதல்
-- நாட்டிலும், வீட்டிலும் அமைதி, சமாதானத்தை உண்டாக்குதல்
-- நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுதல்
-- எண்ணத்தைத் தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல்
-- கடந்த காலத்தின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நிகழ்கால வாழ்க்கையில் வெற்றி பெறுதல்
-- இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை அடைதல்
இனிமையான அனுபவங்கள், எளிய நடை, கலகலப்பான கலந்துரையாடல், கருத்துக்கு விருந்தளிக்கும் உவமைகள், சகோதர வாஞ்சை, சந்தோஷப் பகிர்வு, என அனைத்துமாய் ஒரே குடையின் கீழ் அனுபவிக்கும் இஸ்லாமியப் பயிற்சி முகாம்! இது ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியல்ல; முற்றிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி! இது ஓர் உள் அரங்கச் சுற்றுலா (An Indoor Picnic) !!
குடும்பத்துடன் பங்கேற்கலாம். பெண்களுக்குத் தனியிட வசதி. (நிகழ்ச்சி முடியும் வரை குழந்தைகள் தனியாகப் பராமரிக்கப்படுவர். அவர்களுக்கு வினாடி வினா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.)
காலைச் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு, மாலை தேநீர், மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஸ்நாக்ஸ், பயற்சிக் குறிப்பேடுகள், கலந்துகொண்டதற்கான சான்றிதழ்... அனைத்தும் வழங்கப்படும்.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் அல்லது கீழ்க்கண்ட மின்னஞ்சல்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும்:
துபாய் :
1. 050-3268336 (சேட்டு காக்கா)
2. 055-6838647 (M.S. அப்துல் ஹமீது)
அபுதாபி :
050-6904600 (மக்பூல்)
மின்னஞ்சல் முகவரிகள் :
msahameed@gmail.com, sheit1@eim.ae, tas_meera@yahoo.com
முன்பதிவு செய்துகொள்வதற்கு கடைசி நாள் : 04.04.2011
முன்பதிவு செய்துகொண்ட நபர்களே முகாமில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர். குறைந்த இருக்கைகளே இருப்பதால் காயல் பட்டணத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் : நபர் ஒன்றுக்கு திர்ஹம் 10/- (குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை). காலை 8.00 மணிக்கு வருகைப் பதிவு செய்யும்பொழுது கட்டணம் செலுத்தவேண்டும்.
வாகன வசதி : தேரா நைஃப் பஜாரிலிருந்தும், அல் முதீனாவிலிருந்தும் 14 Seater வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மிகச் சரியாக காலை 7.15 மணிக்குப் புறப்படும்.
தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் :
ஆஸாத் - 050-2766034, ஃபஸ்லுர் ரஹ்மான் - 050-7357048
நிகழ்ச்சி நிரல்:
8.00 - 8.15 AM : வருகைப் பதிவு
8.15 - 8.40 AM : காலைச் சிற்றுண்டி & தேநீர்
மிகச் சரியாக காலை 8.45 மணிக்கு இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி துவங்கும்.
8.45 - 8.50 AM : கிராஅத்
8.50 - 9.00 AM : அறிமுகவுரை
9.00 - 10.30 AM : அமர்வு – 1
10.30 - 10.45 AM : தேநீர் இடைவேளை
10.45 AM - 12.00 PM : அமர்வு – 2
12.00 - 2.30 PM : ஜும்ஆ + மதிய உணவு
2.30 - 3.45 PM : அமர்வு – 3
3.45 - 4.30 PM : அஸ்ர் + தேநீர்
4.30 - 6.15 PM : அமர்வு – 4
6.15 - 7.00 PM : மஃக்ரிப் + ஸ்நாக்ஸ்
7.00 - 8.00 PM : அமர்வு – 5
இதற்கு முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகளில் சில:
ஆஷிக் நூர்:
பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தனி மனித வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். அல்லாஹ்வும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்ன கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டும் என்ற என் எண்ணத்தைப் பலப்படுத்தும் விதமாக இம்முகாம் அமைந்தது. இந்த இனிய முயற்சி தொடர்ந்து நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
N. ரியாஸுத்தீன்:
நான் முதன்முறையாகக் கலந்திருப்பதால் இந்தப் பயிற்சி முகாம் தொடர்ந்து நடக்க இறைவனிடம் துஆச் செய்கிறேன். எந்த இயக்கமும் சாராமல் மனிதனுக்கு மட்டும் தேவை என்பது போல் மிகவும் நன்றாக இருந்தது.
தகவல்:
காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE
Note: செய்தி திருத்தப்பட்டுள்ளது |