வரும் ஏப்ரல் 3,2011 அன்று தற்போது நடந்துவரும் காயல்பட்டினம் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் விரிவாக்கப்பணிகள் குறித்த விளக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அவ்வேளையில் அதன் சார்பு ஸ்தாபனங்களின் இணையதள துவக்க நிகழ்ச்சியும் நடைபெறும். இது குறித்து அப்பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.இப்னு சவுத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் விரிவாக்கப்பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இது குறித்த விளக்க கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிறு (ஏப்ரல் 3, 2011) அன்று சென்னை மண்ணடியில் உள்ள மியாசி (MEASI) பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறும்.
அவ்வேளையில் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி, இத்திஹாதுல் இஹ்வானுல் முஸ்லிமீன், ஆயிஷா சித்தீக்கா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி ஆகிய ஸ்தாபனங்களின் இணையதளங்கள் துவக்க நிகழ்ச்சியும் நடைபெறும். ஆகவே அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இதுக்குறித்த மேல் அதிக விபரங்கள் பெற 95668 40261 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.இப்னு சவுத்,
துணைத் தலைவர், அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி. |