வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று (26.03.2011 சனிக்கிழமை) மட்டும் ஒன்பது பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
உடன்குடி அருகிலுள்ள தாண்டவன்காடு என்ற ஊரைச் சேர்ந்த செல்லச்சாமி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்பு மனுவை திருச்செந்தூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பொற்கொடியிடம் வழங்கினார்.
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சுடலைக் கண்ணுவும்,
சுயேட்சையாக திருச்செந்தூரைச் சேர்ந்த சிதம்பரம்,
உடன்குடியைச் சேர்ந்த சித்திரைலிங்கம்,
நா.முத்தையாபுரத்தைச் சேர்ந்த ராமர்,
வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த தனலிங்கம்,
பரமன்குறிச்சியைச் சேர்ந்த ராஜ்குமார்,
வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த மணி மற்றும்
உடன்குடியைச் சேர்ந்த அரிகோபால கிருஷ்ணன் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் இந்திய நாடாளும் மககள் கட்சி வேட்பாளர் செல்லச்சாமி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது உரிய ஆவணங்கள் குறைபாட்டினால் சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இவர்கள் தவிர, குறைவான ஆவணங்களால் கடந்த 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரான யாதவா மகா சபையைச் சேர்ந்த அனில் நட்டார் சனிக்கிழமை முழுமையான ஆவணங்களை இணைத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். |