| |
செய்தி எண் (ID #) 5867 | | | வெள்ளி, மார்ச் 25, 2011 | சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 4) | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2942 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
ஆர்ப்பாட்டம் நடந்த ஜனவரி மாதத்தில் குடியிருப்புகள் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் அனைவரும் - இத்திட்டம் அரசின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது விசாரணைக்கு வந்த பிறகே - இத்திட்டத்திற்கான ஒப்புதல் காயல்பட்டின நகராட்சியிடம் மட்டுமன்றி, பிற துறைகளிடம் இருந்தும் பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது.
குடியிருப்புகள் கட்டுமானங்களில் முக்கிய அரசு ஒப்புதல்களில் ஒன்று DTCP / LPA ஒப்புதல். இது காலி நிலத்தில் எவ்வாறு வீடுகள் அமைக்கப்படும், சாலைகளுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும், திறந்தவெளியாக எவ்வளவு இடம் ஒதுக்கப்படும் போன்ற விபரங்கள் குறித்த (Layout) ஒப்புதல். இது வீடுகள் கட்டப்படும் முன்னரே பொதுவாக பெறப்படும். இதற்க்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் போது, அதனுடன் இணைத்து நகராட்சி சம்மதம், நில உரிமையாளர்கள் குறித்த அரசு சார்ந்த வழக்கறிஞர் கருத்து போன்ற தகவல்களையும் வழங்கவேண்டும்.
தற்போது காயல்பட்டினத்தில் குடியிருப்பு கட்டுமானம் நடக்கும் நிலம் குறித்த வழக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் நகராட்சி ஒப்புதலும் வழங்கப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க - அரசு எவ்வாறு DTCP ஒப்புதல் பெற்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜனவரி இறுதியில் நகராட்சிக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி DTCP ஒப்புதலுக்கு இணைக்கப்படவேண்டிய சான்றிதழ் பெறக்கூட இருந்திருக்கலாம்.
இருப்பினும் அக்டோபர் (2010) மாதம் துவங்கிய கட்டுமானத்திற்கு பிப்ரவரி 2, 2011 அன்று DTCP ஒப்புதல் (மேற்கோள் எண் 218/2011/TUI) பெறப்பட்டுள்ளது. கட்டுமானம் துவங்கியபிறகு, நிறைவான சான்றிதழ் இன்றி எவ்வாறு DTCP ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அதுமட்டுமன்றி CRZ ஒப்புதலுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 8 அன்று தான் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் பிப்ரவரி 9 அன்று ஐக்கிய பேரவை சிறப்பு கூட்டம் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடந்தது.
(பாகம் - 1) | (பாகம் - 2) | (பாகம் - 3)
[தொடரும்]
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|