Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:45:16 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5858
#KOTW5858
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 23, 2011
இ.யூ.முஸ்லிம் லீகிலிருந்து ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4364 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையத்திலிருந்து...
உஸ்மான்,
மண்ணடி, சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. fathima musafer neekem yen?
posted by kudack (qatar) [23 March 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 3504

fathima musafer neekem yen?

muslim leauge katchi athen parempariye sinnethil potiyide vendum endru aver sonnethu thavera?

netru mulaithe katchi ko.mu.ka, ellam d.m.k.il 7seat,

innum nam samuthayethirku kalainger in manethil thaan idem iruke thavire kolhai alavil illai,

athai kettu pere nammidem sariyane thalaimeyum illai,

ithai ellam thalaimai idethil therivithaal aver ooremkattepaduvar,

thalaimai kalaiger i eeman kondirupathu namekuthaan theriyume,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Wow
posted by Sayna (Bangkok) [24 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3511

Fathima musaffer neekam,

Muslim legue anbargalay inoru legue arambika valie vaguthu kuduthu irukireergal,

Ithunaal varaikum muslim legue la ulla pirachanai velila vara villai,inimalum vara koodathu yandral Sagotharie Fathima musaffer idam sendru pilai poruka solluvathu nallathu, illai yandaral muslim legu gai pathie madaiel vasanam ketkalam
poruthu irunthu parkalam

Anbu sargotharar sonnathu nigam, Kothadie katchiekellam 7 seat , aalum katchiyai thalai nimirthu vaika uthavie saitha kaiethey millath sahib avagal muslim leguku 3 seat , yanna kodumai ithu ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒரு அதிசயத்தை பார்த்தீர்களா!..
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [24 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3517

என்ன தற்காலிகமாக நீக்கம் தானா? நிரந்தரமான நீக்கமாக இருந்தால் இன்னும் ஒரு புதிய அணி உருவாகி இருக்குமே! நமக்கும் ஒரு பெருமையாக இருக்கும். சிறுபான்மை சமுதாயமான நாங்கள் எவ்வளவு அணிகள் வைத்து இருக்கின்றோம் என்று சொல்லலாம் அல்லவா.

இனி நடப்பதை பாருங்கள், ஜனாப் தாவூத் மியான் கான் அவர்கள் கேஸ் போட்டு இது என் தந்தை உருவாக்கிய கட்சி என்று பிரிந்து போனார், இந்த அம்மையாரும் கேஸ் போட்டு, இந்த கட்சியை என் தந்தை தான் கட்டிக்காத்து வளர்த்தார் என்று பிரிவதற்கும் வாய்ப்பு உள்ளது. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

ஒரு அதிசயத்தை பார்த்தீர்களா!.. ஒரு தி.மு.க உறுப்பினர் (அதாங்க என் ஆசான், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளரை நீக்குகின்ற அதிசயத்தை... இந்த மாதிரி அதிசயம் எல்லாம் நம்மிடம் தான் நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. NEED UNITY
posted by MOHIDEEN ABDUL KDER (ABUDHABI) [24 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3527

ASSALAMU ALAIKKUM.VARAH

This is only not wanted by any muslim brothers and sisters in TN. We all r asking this community to form one UNITY, But this IUML made this type of blender mistake and even, Are they could not manage her and solve any type of small issue before gave any unwanted comments to the media or any. Then how they r going to face or solve total community problem in politics and society.

Main problem is that misusing the power of cheif by avioding discussion in the board of member inside IUML and taking shelf or small no of people discussion. This is hugely affected the UNITY and must be avoided.

I request the IUML to resolve this issue diplomatically and not give chance to make any other divide or any party.

If IUML had any mistake at any level or situvation pls ask sorry and forgive every one keep in mind is that your goal is only forming one unity.

Just now mr.ALTHAF joint and do not give another chance to DMK to tell we gave sister like that....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வேதனைதான்.... வேறு வழியில்லை!
posted by Macky (Chennai) [24 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3535

எனது அன்பு மகள் ஃபாத்திமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)

நான் பன்னெடுங்காலம் தலைவராகவும், உறுப்பினராகவும் ஊழியம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணி மற்றும் உறுப்பினர் பொறுப்பிகளிலிருந்து உன்னை நீக்கம் செய்த செய்தி நான் உருவாக்கிய மணிச்சுடர் நாளிதழில் 23-03-2011 அன்று வெளிவந்ததை கண்டு கண் களங்கினேன். அதற்கு இணையதள மூலம் நீ நியாயம் கேட்டு எழுதி இருந்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.

கட்சியின் தன்மானத்தை காப்பது தவறா? காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா? சொந்த சின்னத்தில் நிற்காமல் மற்றவர்களுக்கு பினாமியாக நிற்பதை கண்டிப்பது தவறா? நாடாளுமன்ற சட்டமன்றங்களில் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என நினைப்பது தவறா? கட்சியின் தன்மானத்தையும், கண்ணியத்தையும் அடுத்தவர்களிடம் அடகு வைக்கும் தலைமையை விமர்சிப்பது தவறா? என்றெல்லாம் நீ அடுக்கிக் கொண்டே போவது படிப்பவர்களுக்கு உன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். அன்பு மகளே! உன் கேள்விகள் நியாயமானவை ஆனால் அதை எங்கு கேட்பது என்பதில் நீ எல்லை மீறி விட்டாய் அம்மா!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு என்ற எத்தனையோ அமைப்புக்கள் இருக்க ஒரு துண்டுச் சீட்டில் கூட உன்னுடைய உணர்வுகளை எழுதி காட்டாமல் நான் கஷ்டப்பட்டு கட்டி காப்பாற்றிய கட்டுப்பாட்டை நீ சிதறடித்து விட்டது யாரால்தான் பொறுத்தக் கொள்ள முடியும்.?

மகளே உனக்கு தெரியுமா முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைக்க முயன்றபோது ஏற்பட்ட எதிர்ப்பை.? 1991 உனக்கு திருமணம் முடிந்திருந்த சமயம் - குற்றாலத்தில் உள்ள நன்னகரத்தில் - தாய்ச்சபையில் பன்மொழிப் புலவர் எம்.ஏ. லத்தீப் சாஹிப் அவர்களை மீண்டும் இணைப்பது பற்றி நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மகளிர் அணி அமைக்க வேண்டுமென கருத்து முன்மொழியப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூசுப் சாகிப் தனது கம்பீர குரலில், இது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது என கூறி எதிர்த்த காரணத்தால் அதை பலரும் ஆமோதித்த காரணத்தால் மகளிர் அணி அமைக்க முடியவில்லை. அதன் பின் எனது 69-வது பிறந்த நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போது எனது மகள் என அடைமொழியோடு நீ உரையாற்ற அனுமதிக்கப்பட்டாய் அதற்கு கூட உலமாக்களும், பெரியவர்களும் எவ்வளவு எதிர்த்தார்கள் தெரியுமா?

1999 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாடு அதல் மகளிர் அணி கருத்தரங்கம் நடைபெற்ற போது உன் அரசியல் பிரவேசத்திற்கான வாயில் திறக்கப்பட்டது. அம்மாநாடு முடிந்த சில நாட்களிலேயே இறைவனின் நாட்டப்படி நான் காலமாகி விட்டேன் அந்த நேரத்தில் நம் குடும்பத்திற்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். நம் குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க மகளிர் அணியின் மாநில அமைப்பாளராக உன்னை நியமித்தார்.

அன்பு மகளே! நீ எந்த பேராசிரியரை விமர்சனம் செய்கிறாய் தெரியுமா? கடந்த காலம் உனக்கு தெரிய நியாயம் இல்லை எனது அன்பு மனைவி உனது அன்புத்தாய் காலமான நேரத்தில் நான் தனிமைப்பட்டிருந்த போது எனக்கு ஆறுதலும் தேறுதலும் அவர்தான். பாபர் மசூதி தகர்க்கப்பட்டதிலிருந்து நான் இவ்வுலகை விட்டு செல்வது வரை எனக்கும் தாய்ச்சபைக்கும் ஒரு சோதனையான காலகட்டம் அதில் எனக்கு உற்ற துணையாக இருந்து உதவி புரிந்தவர் இந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்தான்.

நீ மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவிற்குச் சென்றால் காயிதெ மில்லத் மாளிகையை அன்னாந்து பாரம்மா. அந்த அழகு மாளிகையை கட்டியது யார் தெரியுமா? இந்த பேராசிரியர் தான். உன் தந்தை நான் கூட தாய்ச்சபையை வாடகை கட்டிடத்தில்தான் நடத்தினேன்; கஷ்டப்பட்டேன்; கடன் பட்டேன்.

ஆனால் இன்று பேராசிரியர் சொந்த இடம் மட்டுமின்றி மணிச்சுடர் நாளிதழ், பிறைமேடை மாதமிருமுறை, தி டைம்ஸ் ஆப் லீக் ஆங்கில மாத ஏடு என்பதோடு நின்று விடாமல், தாய்ச்சபையின் தலைமை அலுவலகத்தை அற்புதமாக இயங்க வைத்து இணையதளத்தையும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மூலம் எண்ணற்ற நூல்களையும் வெளிக்கொண்டுவர பாடுபடுவதை நினைத்து பாராம்மா.

மகளே ஃபாத்திமா ஊருக்கு தெரியாமல் உன்னிடத்தில் மட்டும் ரகசியமாக ஒன்றை கேட்கிறேன். உன் தந்தை மீது உனக்கு என்ன கோபம். நீ பேராசிரியரை விமர்சிக்கிறாயா? என்னை விமர்சிக்கிறாயா? மூன்று தொகுதிகளில் ஒன்றை கொடுத்து விட்டார் என்றும், இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றும் குரல் எழுப்புகிறாயே இதற்கு நான் அல்லாவா பதில் சொல்ல வேண்டும்.?

1984 -ல் திருவல்லிக்கேணியில் சட்ட மன்ற தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், 1990 -ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் உன் தந்தை நான். 1996 -ல் நம் இயக்கத்தையே அவமான படுத்திய ஜெயலலிதா அம்மையார் திருவல்லிக்கேணி, பெரியகுளம் என இரண்டு தொகுதிகள் தந்து அதில் இரட்டை இலை சின்த்தில் போட்டியிட்டு இரண்டிலும் தோற்றோம். இந்த வரலாறு எல்லாம் உனக்கு தெரியாது. சரி அதுவெல்லாம் போகட்டும், நான் உன்னை ஒன்று கேட்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் என்ற பதவியை உனக்கு தந்து 12 ஆண்டுகளாகி விட்டாதே இந்த இயக்கத்திற்கு நீ செய்தது என்ன என்பதை பற்றி என்றிக்காவது நினைத்து பார்த்தாயா?

மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள், ஊழியர் கூட்டங்கள், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்குகள் இதில் எதுவொன்றுக்காவது உன்னுடைய பங்களிப்பு உண்டா? என்னுடைய மறைவிற்கு பின் வரலாறு பேசும் வகையில் சென்னை தீவுத் திடலில் 2008 -ல் மணிவிழா மாநில மாநாடு நடைபெற்ற போது உன்னையும் கண்ணியப்படுத்தும் வகையில் மகளிர் கருத்தரங்கம் நடத்தும் பொறுப்பை உன்னை நம்பி ஒப்படைத்தாரே பேராசிரியர். அது உன் சொந்த நிழ்ச்சியாக நடத்தினாயே தவிர, கட்சிக்கு பெருமை சேர்த்தாயா?

குறைந்த பட்சம் அந்த இராஜாஜி மண்டபத்தில் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது என்ற வரலாற்று பதிவையாவது நீ நினைவு படுத்தினாயா? 11-12-2010 -ல் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் சென்னையில் இருந்து கொண்டே நீ பங்கேற்க வில்லையே!

இந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் எத்தனை எத்தனை செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் எதிலாவது நீ பங்கேற்று இருக்கின்றாயா? அரசியலில் உன்னை வளர்த்து விட ஆசைப்பட்ட நம் இயக்கத்தவர்கள் உன்னை கூட்டத்திற்கு அழைத்தார்கள் நீ அவர்களுக்கு எத்தனை சிரமங்களை கொடுத்தாய். ஏ.சி பயணங்கள் நம் இயக்கத்திற்கு ஒத்து வருமா? அப்படி கஷ்டப்பட்டு நடத்திய பொதுக் கூட்டங்களில் கூட இயக்கத்தை முன்னிலை படுத்தினாயா? உன்னைத்தான் முன்னிலை படுத்தினாய்.

உன் மனசாட்சியை தொட்டுச் சொல் இந்த இயக்கத்திற்காக ஒரு துரும்மை தூக்கி போட்டாயா? """"இஃப்தார் நிகழ்ச்சி நோன்பாளிகளை வைத்து நடத்தக் கூடிய ஒன்று. அதுதான் முஸ்லிம் லீக் பாரம்பரியம் ! ஆனால் அதைக் கூட கொச்சைப்படுத்தும் வகையில் என் விருப்பத்திற்கு மாறாக அரசியல் கட்சி தலைவர்களையெல்லாம் அழைத்து முஸ்லிம் லீக் மகளிர் அணி பெயரால் அழைப்பு அனுப்பி """"மில்லத் ஹஜ் சர்வீஸ்’’, மில்லத் அறக்கட்டளை’’ என்ற உன் ஸ்தாபனங்களை மட்டும் முன்னிலை படுத்திக் கொண்டாய் இது எந்ந வகையியில் நியாயம்? மகளிர் அணி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களாகியும், ஒரு துணை அமைப்பாளர், ஒரு இணை அமைப்பாளராவது அமைத்து தந்திருக்கிறாயா? உனக்கு அடுத்த ஸ்தானம் யார் என்பதை யாவது அடையாளம் காட்டியிருக்கிறாயா?

2004-ம் ஆண்டு எம்.பி. சீட் கேட்டாய், கட்சி பேராசிரியருக்கு வழங்கியது. நீ தலைமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தாய்.

2006-ல் சட்டமன்ற தேர்தலில் தலைமையையும், தோழமை கட்சியையும் விமர்சனம் செய்தாய்.

2009-ல் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் கேட்டாய். கட்சி அப்துல் ரஹ்மானுக்கு வழங்கியது. அந்த அப்துல் ரஹ்மானை இன்று விமர்சனம் செய்தாய். அவர் என் தம்பி மட்டுமல்ல அவர் என் இதயக்கணி எத்தனையோ ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாக உதவியவர்.

அவருடைய மேடை பேச்சை கொஞ்சம் கவனித்து பார். உன் தந்தை அப்துஸ் ஸமது சாயல் அப்படியே தெரியும். நீ பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய போது இயக்கத்திற்கு எவ்வளவு கெட்ட பேர். உனக்கே தெரியாமல் அகில இந்திய தலைமையியும், மாநில தலைமையும் செய்த உதவிகள் மறைக்கப்பட்ட உண்மைகள்.

ஏப்ரல் 13 தமிழக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க தலைமையில் மூன்று இடங்களில் நாம் போட்டியிடுகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைமையும், மாநில தலைமையும் செய்த ராஜதந்திர முயற்சியால் தி.மு.க காங்கிரஸ் கூட்டு ஏற்பட்டது. அந்த தலைமை நம்மை பாராட்டின இதில் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. பெருமைதான் கிடைத்தது. மூன்று தொகுதிகளில் நிற்கின்ற வேட்பாளர்கள் யாரோ எவரோ அல்ல! துறைமுகத்தில் நிற்பவர் எத்தனையோ ஆண்டு காலம் முஸ்லிம் லீகின் கொள்கையை ஊர் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவரின் புதல்வர், நாகப்பட்டினத்தில் நிற்பவர் தாய்ச்சபைக்கு உதவிக் கரம் நீட்டியவர். வாணியம்பாடியில் நிற்பவர் தாய்ச்சபையின் பிரச்சார பீரங்கி. இதில் யாரை குறை காண்கிறாய்?

இன்னொரு இயக்கத்தை கலைத்து விட்டு தாய்ச்சபையில் கொண்டு வந்து யார் இணைத்தாலும் பாராட்டுவதுதான் மனிதப் பண்பாடு. உன் தந்தை ஆகிய நான் பதவியில் இருந்த காலத்தில்1989 முதல் 12 ஆண்டு காலம் நம் இயக்கத்திற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. எம்.ஏ. லத்தீப் சாஹிப் நடத்திய கட்சியில்தான் உறுப்பினர்கள் இருந்தனர்.

பேராசிரியர் தலைiமை பொறுப்பில் இருக்கும் போதுதான் 2004 க்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பொறுப்புக்களில் 135க்கும் மேற்பட்டோர் பதவியில் உள்ளனர். இப்போது சட்டமன்றத்திற்கு மூவர் போட்டியிடுகின்றனர். இதை முதலில் நீ தெரிந்து கொள்.

என்னதான் கோப தாபங்கள் இருந்தாலும் கட்சியின் செயல்பாட்டையோ, தலைமை எடுத்த முடிவையோ எதிர்க்க துணிந்தாலும் அந்த விமர்சனங்கள் கட்சிக்குள்தான் இருக்க வேண்டும்.

உதரணத்திற்கு மில்லத் ஹஜ் சர்வீஸில் நடக்கின்ற ஒரு சம்பவததை உன்னுடைய ஊழியர் வெளியுலகத்திற்கு சொன்னால், அல்லது உன்னுடைய ஸ்தாபனத்தை பற்றி உன்னுடைய ஊழியர் மேடை போட்டு பேசினால் நீ அந்த ஊழியருக்கு கிரீடம் சூட்டியா மகிழ்வாய்? நீ கட்சிக்கு நன்மை செய்வதாக இருந்தால் கட்சிக்குள் உள்ளேதான் பேசி இருக்க வேண்டும்.

முஸ்லிம் லீக் தமையை விமர்சித்து சென்னை பிரஸ் கிளப்பில் 10-03-2011 -ல் பேட்டி கொடுத்தாய் காதர் மொகிதீனை தூக்கி எறிவோம் என்று ஜூனியர் விகடனுக்கு 16-03-2011 ல் பேட்டி கொடுத்தாய். பல இடங்களிலும் இயக்கத்தை விமர்சனம் செய்தாய் எல்லாவற்றையும் அந்த தலைமை பொறுத்துக் கொண்டது.

ஆனால் உச்ச கட்டமாக 22-03-2011 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் பிளாக் அண்ட் ஒய்ட் தொலைக்காட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு விரோதமாகவும், மனித நேய மக்கள் கட்சியை ஆதரித்தும் நீ கொடுத்த பேட்டி என்னையே கதிகலங்க செய்து விட்டது. மகளே பாத்திமா சத்தியமாக சொல் - அங்கீகரிக்கப்பட்ட சமுதாய பேரியிக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அழைத்த இந்த நாவு என்றைக்காவது இன்னொரு இயக்கத்தை உன் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியதுண்டா. எவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான செய்தியை என் பெயரை பயன்படுத்தி சொல்லி விட்டாய்.

இதற்கு பிறகுதானே உன்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இல்லையேல் எப்படி கட்டுப்பாட்டை காப்பாற்றுவது? இதற்கு பிழை பொருக்கத் தேடாமல் மஹ்சரில் என்னை எப்படி நீ சந்திப்பாய். அதற்கு ஒரே வழி உன் தவறுதலுக்கு மன்னிப்பு கேள்! தாய்ச்சபை தலைமை இடத்தில் மன்றாடு! அதுதான் தந்தை என்ற முறையில் உனக்கு நான் செய்யும் உபதேசம்.

இப்படிக்கு

சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் இப்போது நம்மிடையே இருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். அந்த நினைவில் எழுகுகிறேன்.

தங்கள் அன்பு சகோதரி

இசட். எம். முஹம்மது செய்யது ஃபாத்திமா
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மகளிர் அணி அமைப்பாளர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Coments sa illai thodar kathaiya
posted by Seyed (Bangkok) [25 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3539

Comments no:6

Appa da padichie mudichitaan pa, Ithu comments sa illa news sa ,

mudiula thaan thariuthu , kaiethey millath sahib ji, ipo iruntha ipadie thaan yaluthie irupanga du sollie vittinga, athuku aporam thaan thariuthu ithu flashback du, Ithu yallam arasiyala sagajam ma pa,

ipo poie manipu keyta serthu kiruvanga yanna oru demand pannuvaga , magalirn ani thalaiviya poda mattom nama muslim legula oru angathinara irunga du sollu vanga , reason keyta , kachien kattupattie oru thadavai meeritinga , adutha thadavai meera mattingadu yanna uthiravatham athunala ungaluku magalir anie thalaivie pathavie thara mattom angathinara irunga du solluvanga sister,

but yannoda request Thayavu saithu naam yallam muslims nama ludiay kuraiyai madai pottu publicity pannathinga , naalu suvathukulla pasunga,

oru old mozie (paza mozhie)
Samuthayam Randu patta , Arasiyal Chanakiyangaluku kodatamaam, Puringie irukum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. (மு) ஸ்லிம் லீக்கா? முஸ்லிம் வீக்கா...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [26 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3549

ஆஹா!என்ன ஒரு கற்பனை வளம்? இறந்து போனவர்களெல்லாம் வந்து இப்படி ஒர் அறிவுரை!அதுவும்,காதர் மெய்தீனுக்காக பரிந்துரை வேறு,கட்டிடம் கட்டினாராம்,பத்திரிக்கை நடத்தினாராம்,பந்தல் போட்டாராம்,பாய் விரிச்சாராம்,சூப்பரோ சூப்பர்.பின் தங்கியிருக்கும் என் சமுதாயத்துக்கு என்னய்யா பண்ணுனாரு உங்க ஆளு?அவர் சிராஜுல் மில்லத்தின் வாரிசு என்பதால் தான் கொஞ்சமாவது தன்மான உணர்ச்சி உண்டாகி உங்கள் அமைப்புக்கு 100 கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளார்.எத்தனைக் காலத்திற்கு இப்படி கலைஞர் காலடியில் சமுதாயத்தை நசுக்கும் காலணியாக கிடத்திக் கொண்டிருப்பீர்கள்?மூன்று ரூபயை பிச்சை போட்டு விட்டு அதில் ஒரு ரூபாயைத் திருப்பி எடுப்பது அயேக்கியத்தனமில்லயா?சொந்தமாக பங்களாக்கள்(வீடுகள்) இருக்கும் உங்களுக்கு,சொந்தச் சின்னத்தில் போட்டியிடனும்ணு சொரனையே இல்லாத போது துணிச்ச்லோடு ஒரு பெண்மணி தட்டிக்கேட்டால் அவரைத்தூக்கி எறிவீர்கள்.எதுக்கு மரணித்தவரைத் தட்டியெழுப்பி தன் மகளுக்கு அறிவுரை சொல்வது போல் ஒரு வேண்டாத கற்பனை?இதை அவரிடமே நேரடியாகச் சொல்லிட்டுப் போகவேண்டியது தானே?உண்மையில் சிராஜுல் மில்லத் உயிரோடு இருந்திருந்தால் தன் மகளின் தன் மான உணர்வைக் கண்டு உள்ளம் மகிழ்ந்திருப்பார்.முஸ்லிம் லீக் முஸாஃபிர் கானாவாக மாறி ஆண்டுகள் பல ஓடிவிட்டன.உருப்படியாக சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்யப்பாருங்கப்பா! அதுக்குப் பிறகு உங்களுக்கு நாங்க ஓட்டுப் போடுறது பற்றி யேசிக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வேண்டாம் புதிய ஒரு முஸ்லிம் கட்சி !!
posted by Salai.Mohamed Mohideen (California) [26 March 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3553

கமெண்ட் # 6 மிகவும் அருமையான கற்பனை. கருணாநிதி எழுதிய கதை போல் இருந்தது. மரணித்தவர் அறிவுரை மற்றும் மஹ்ஷர் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். நல்ல வேலை காய்தேமில்லத் அவர்கள் இப்போது நம்மிடையே இருந்தால் இப்படித்தான் நமது தலைவருக்கு (காதர் மொஹிதீன்) அல்லது தலைமைக்கு எழுதியிருப்பார்கள் என்று யாரும் இதுவரை ஒரு கற்பனை புனைய வில்லை. ஒரு வேலை அப்படி யாரவது எழுதினால் அவரின் அறிவுரை எத்தனை (ஆயிரம்??) பக்கங்கள் இருக்குமோ. தான் கஷ்டப்பட்டு தொடங்கிய தன்மானம் மிகுந்த கட்சியை கருணாநிதியிடம் பல ஆண்டுகளாக அடகு வைத்து விட்டார்களே என்ற வருத்தம் தான் மிஞ்சும். மணிமண்டபத்தை பெரிய சாதனையாக சொல்லுகிறார்கள். மேலும் காய்தேமில்லத் அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். நல்லவேளை அதானால் முஸ்லிம் சமுதாயம் அடைந்த நன்மை என்ன என்று யாரும் கேட்க வில்லை.

சகோதரி அவர்களுக்கு வந்த இந்த ரோசம் பல வருடங்களுக்கு முன் வந்து இருந்தால் ஒரு வேளை இன்று நம்மில் முஸ்லிம் லீக் மட்டும் ஒரே ஒரு கட்சியாகவே இருந்து இருக்குமோ என்னோவோ? நேற்று அல்லது இன்று தாய் சபையை கருணாநிதி குடும்பத்துக்கு அடகு வைத்து இருந்தால் பறவையில்லை. அது வருடங்கள் ஆகி விட்டது அல்லவா? ஒரு சிலர் முஸ்லிம் லீக் கட்சியை கருணா லீக் என்று கிண்டலாக சொல்லுகிறார்கள். வருத்தமாகத்தான் உள்ளது. பாவம் கொஞ்சம் ரோசத்தில் (அதெல்லாம் நமக்கு எதுக்கு என்று மற்றவர்களை போலே அமைதியாக இல்லாமல்) உணர்ச்சி வசப்பட்டு விட்டார் இந்த சகோதரி. கூடவே நமது ஹாமித் பக்ரி அவர்கள் வேறு (உங்களையும் நீக்கிடான்களா?). ரோசத்தின் விலை தற்காலிக நீக்கம். சகோதரி அவர்களே தயவு செய்து புதியதாக ஒரு கட்சி (தான்மானமுள்ள முஸ்லிம் லீக்?) ஒன்றை தொடங்கி முஸ்லிம்லீகை இன்னும் ரெண்டாக உடைத்து விடாதீர்கள். கூத்தாடி ரெண்டு பட்டா கருணாநிதி அவர்களுக்குதான் தான் கொண்டாட்டம். இதையே காரணம் வச்சு அடுத்த தேர்தலில் ஒரு சீட் தான் கொடுப்பார் தாய் சபைக்கு . வேண்டாம் இந்த சிரமமும் கேவலமும். முடிந்தால் இந்த கட்சியிலேயே (ரோசத்தை யெல்லாம் குப்பையில் தூக்கி போட்டு) தொடருங்கள் அல்லது வேறு ஒரு முஸ்லிம் கட்சி/அமைப்பினருடன் சேர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஏற்கனவே இருக்கின்ற எண்ணற்ற முஸ்லிம் கட்சிகளையே நம் சமுதாயதினர்களால் தாங்க முடியவில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW 53வது கால்கோள் தின விழா!  (24/3/2011) [Views - 3131; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved