காயல்பட்டினம் பிரதான வீதியில், அஞ்சலகத்தையொட்டி அமைந்துள்ள பேருந்து நிறுத்த பயணியர் ஓய்வுக் கூடம் பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்துள்ள செய்தி மார்ச் 7 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் புதுப்பிக்கும் திட்டம் நகராட்சியிடம் இல்லை என தெரிகிறது.
டிசம்பர் 29, 2010 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் தபால் நிலையம் அருகில் உள்ள நிழற்குடை, கே.எம்.டி. மருத்துவமனை அருகில் உள்ள நிழற்குடை குறித்து கீழ்க்காணும் பொருள் முன் வைக்கப்பட்டது.
காயல்பட்டணம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம் 2010-11இன் கீழ் கீழ்கண்ட இடங்களில் புதிதாக நிழற்குடை
கட்டுவதற்கு மதிப்பீடு கேட்டு இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகளை, தூத்துக்குடி மாவட்டம் அவர்களிடமிருந்து வரப்பெற்ற கடித ந.க.எண்:- அ2/254/2010 நாள்:- 27.07.2010 கடிதம் மன்றத்தின் பார்வைக்கும், முடிவிற்கும்.
(1) காயல்பட்டணம் தபால் நிலையம் முன்பாக உள்ள பழைய சேதமடைந்த நிழற்குடை கட்டிடத்தினை அகற்றிவிட்டு புதியதாக நிழற்குடை கட்டுதல்
மதிப்பீடு (இலட்சத்தில்): 2.00
(2) திருச்செந்தூர் ரோடு கே.எம்.டி. மருத்துவமனை முன்பாக பயணிகள் நிழற்குடை கட்டுதல்
மதிப்பீடு (இலட்சத்தில்): 2.00
இதுகுறித்த நகராட்சி முடிவு:
(1) தபால் நிலையம் முன்பாக உள்ள பழைய நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க தேவையான இடவசதியில்லை.
ஆதலால் அவ்விடத்திற்கு பதிலாக பெரிய நெசவுத் தெரு - IOB வங்கி சந்திப்பு மேல்புறம் புதிய நிழற்குடை அமைக்க அங்கீகரிக்கப்பட்டது
(2) கே.எம்.டி. மருத்துவமனை கீழ்புறம் புதிய நிழற்குடை அமைக்க அங்கீகரிக்கப்பட்டது
நிழற்குடையினை புதுப்பிக்க போதிய இடம் இல்லை என நகராட்சி தெரிவித்துள்ளது. அதே இடத்தில, அதே அளவில் நிழற்குடையை புதுப்பிக்க ஏன் இடம் போதாது என்பது விளக்கப்படவில்லை. இருப்பினும் அதற்குப் பகரமாக பெரிய நெசவுத் தெரு - IOB வங்கி சந்திப்பு இடத்தில நிழற்குடை அமைக்க ஒப்புதல் வழங்கி இருப்பது - தற்போது நிலுவையில் உள்ள கே.டி.எம். தெரு - பெரிய நெசவுத் தெரு ஒரு வழிப்பாதை திட்டம் நிறைவேறும்போது, தபால் நிலைய நிழற்குடை அவசியப்படாது என்ற விஷயமும் இம்முடிவிற்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. |