ஜனவரி 4 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஐக்கிய பேரவை பிரதிநிதிகள் சிலரும், நகர தி.மு.க. பிரமுகர்களும் தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியை தூத்துக்குடியில் - ஜனவரி 8 அன்று - சந்தித்தனர். கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்திட வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்வதாக அவ்வேளையில் அவர் கூறியதாக கூறப்பட்டது.
ஜனவரி 9 அன்று தி ஹிந்து நாளிதழ் மாவட்ட வருவாய்துறை அதிகாரி டீ. ரவிச்சந்திரனை மேற்கோள்காட்டி இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டது.
ஜனவரி 13 அன்று நகராட்சி தலைவர் உட்பட ஐக்கிய பேரவை பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரனை சந்தித்தனர். இச்சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் - இத்திட்டம் முறைப்படி அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நில ஆர்ஜிதத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் உரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி, தடைபெற்றுகொள்ளட்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டது.
மேலும் - வழக்கு தொடர சாத்தியமாக ஜனவரி 31 வரை குடியிருப்பு கட்டுமான வேலையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் என்றும் கூறப்பட்டது. பயனாளிகள் இறுதி செய்யப்படவில்லை என்றும், புதிதாக குழு சார்பில் தரப்படும் நபர்களையும் பயனாளிகளாக சேர்த்துக்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உத்திரவாதம் தந்ததாக கூறப்பட்டது.
ஜனவரி 19 அன்று ஐக்கிய பேரவை அலுவலகத்திற்கு வந்த சட்டசபை உறுப்பினர் அனிதா ராதா கிருஷ்ணனிடம் குடியிருப்புகள் குறித்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
குடியிருப்புகளுக்கு எதிராக வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று நகராட்சியின் உத்தரவு பெறப்படவில்லை என்பது. இக்குற்றச்சாட்டினை முன்வைத்து - நகராட்சி சார்பாக அதன் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் பெயரில் தூத்துக்குடி நீதிமன்றத்தில்
மாவட்ட ஆட்சியர் உட்பட பல அரசு துறைகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஜனவரி 31 அன்று விசாரணைக்கு இவ்வழக்கு வந்தது. இத்திட்டம் குறித்து பல ஆவணங்கள் சமர்பிக்கவேண்டி உள்ளது என்று கூறி அரசாங்க தரப்பு - இவ்வழக்கினை தள்ளிப்போட வேண்டியது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி - வழக்கினை பிப்ரவரி 21 வரை தள்ளிப்போட்டார். மேலும் நீதிமன்றம் தடை வழங்காததால் கட்டுமானபணிகள் மீண்டும் துவங்கின.
இத்தீர்ப்பினை தொடர்ந்து அரசு துறையை சார்ந்த சிலர் காயல்பட்டின நகராட்சியினை அணுகி - குடியிருப்பு திட்டத்தினை அங்கீகரித்து சான்றிதழ் தரும்படி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross