சாஹுபுரம் DCW நிறுவன 53வது கால்கோள் தின (Foundation Day) விழா மார்ச் 18 அன்று நடந்தது. நிறுவன தலைவர் முடித் ஜெயின் தலைமை வகித்தார். மால்டி ஜெயின் முன்னிலை வகித்தார்.
கால்கோள் தின விழா குழு தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். விளையாட்டு குழு செயலாளர் ராமசந்திரன் விளையாட்டு தொடர்பான ஆண்டறிக்கை வாசித்தார். நிறுவன மூத்த உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விழாவின் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு பேசினார்.
இதில் தொழிற்சாலையில் அதிக நாள் பணிக்கு வந்த அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. DCW ஆண்டு மலரை விழா குழு தலைவர் ரத்தினவேலு வெளியிட நிறுவன தலைவர் முடித் ஜெயின் பெற்றுக்கொண்டார். மேலும் விளையாட்டு போட்டிகளில் வென்ற குழுக்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை நந்தினி சீனிவாசன் வழங்கினார். கால்கோள் விழாக்குழு துணைத்தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.
2. என்ன கொடுமை posted byசாளை S.I. ஜியாவுதீன் (அல்கோபார்)[24 March 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3526
அவசரத்தில் தலைப்பை தவறுதலாக படித்து "என்ன கொடுமை" என்று கமெண்ட்ஸ் அடிக்க ஆரம்பித்து விட்டேன், மீண்டும் நிதானமாக படித்துப் பார்த்தால் "கால்கோள் தின விழா".
சரி தான், ஒரு துணை எழுத்து நம் தலை எழுத்தை மாற்ற பார்த்து விட்டதே.
So.. எதிலும் நிதானம் தேவை, எனக்கு தான்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
3. அல்லாஹ்வின் சாபம் ஆலையின் மீது உண்டாவதாக!ஆமீன். posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[25 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3538
கொடுமை!கொடுமைன்ணு! கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை, தலை விரிச்சு ஆடிட்டிருந்திச்சாம்! விஷயம் என்னன்ணு விளங்காமெ தலைப்பைப் பார்த்தே கமெண்ட்ஸ் கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாத்தானிருக்கும். ஒரே மூச்சில் ஒரு பாட்டிலையும் முழுசா அடிக்கிற ஆளாச்சே! உங்க பாஷைலெ சொன்னால் (மினரல் வாட்டரைத்தான்) சொன்னேன்.
அதுசரி, யாருக்கு வாழ்த்துச் சொன்னீங்க? நல்ல காற்றை நச்சுக்காற்றாய் மாற்றி நம் ஊர் மக்களின் உயிரை உறிஞ்சு கொண்டிருக்கும்,
கேன்ஸர் விதையைத் தூவி மனிதவளத்தை வேரோடு அறுவடை செய்து கொண்டிருக்கும்,
நம் பச்சிளம் குழந்தைகள் பருவம் வருவதற்கு முன்பே பூப்பெய்தச்செய்து பூரித்துக் கொண்டிருக்கும்,
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் வீட்டுக்கொரு புற்று நோயாளியை உருவாக்கிக் கொண்டிருக்கும்,
நம் கடல்நீரைச் செங்கடலாய் மாற்றி, மீன்கள் செத்து மடிவதும்,
எஞ்சிய மீன்களை உட்கொள்ளும் நம் கண்மணிகளுக்கு சுகப் பிரசவம் என்பதை சுத்தமாக நீக்கிவிட்டு சிசேரியனுக்கு சிந்து பாடிக் கொண்டிருக்கும்,
ஓடியாடி விளையாடும் அரும்புகளுக்கு கண் ஒளியை மங்கச் செய்து கண்ணாடியைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும், மாரடைப்பு மரணங்களுக்கு மறைமுகமாக மலர்வளயம் வைத்துக் கொண்டிருக்கும் அந்த DCWவுக்கா தாங்கள் வாழ்த்துச் சொல்கின்றீர்கள்...?
அந்த ஆலையால் நமக்கும், நம் வாரிசுகளுக்கும், நேரடியாகவும், இன்னும் மறைமுகமாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்கள் ஏராளம்! ஏராளம்! பட்டியலிட பக்கங்கள் போதாது!!!br>
எம் மக்களுக்கு நோவினை செய்யும் அந்த நிறுவனத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் நிச்சயமாக உண்டாகட்டும்!ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross