பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்காக மின்வாரியத்தால் மாதம் ஒருமுறை பகுதி வாரியாக வெவ்வேறு தேதிகளில் மின்தடை செய்யப்படுவது வழமை.
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட - காயல்பட்டினத்தை உள்ளடக்கிய பகுதிகளில் இம்மாதம் 22ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 24ஆம் தேதிக்கு (இன்று) மாற்றப்பட்டது.
எனினும் இதுவரை மின்தடை செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது, நேற்று (23.03.2011) அதிக நேரம் நகரில் மின்தடை செய்யப்பட்டுவிட்டதால் இன்று மின்தடை செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தைத் தொடர்புகொண்டு வினவியபோது, வரும் 26ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படும் என்று தெரிவித்தனர். காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தும், ஆறுமுகநேரி துணை மின் நிலைய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தும் வெவ்வேறு வகையில் அமைந்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
அலுவலகங்களில் பணியாற்றுவோர், மாதாந்திர பராமரிப்பு மின்தடையைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்ட தேதியில் மின்தடையை எதிர்பார்த்து தமது அலுவலகப் பணிகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படும் நிலையிலும், பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும், சொந்த நடவடிக்கைகளையும் அதற்கேற்ப அமைத்துக்கொண்டுள்ள நிலையிலும் இதுபோன்ற குழப்பமான தகவல்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் நகர பொதுமக்கள்.
2. பெண்களுக்கு பரபரப்பு நாள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[24 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3529
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பராமரிப்பு பணிக்காக மாதம் ( சில மணி நேரமே போதும் என்றாலும் ) ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவதை குறை சொல்வதற்கில்லை. ஆனால் அதை முறையாக அறிவித்து அதன்படி செயல்படுவது நல்லது.
முதலில் 22 ஆம் தேதி என்று அறிவித்து பிறகு அதை 24 ஆம் தேதி என்று மாற்றி அறிவித்தார்கள். அவர்களின் அறிவிப்பின்படி இன்று பராமரிப்பிற்காக மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை, மேலும் வேறு தேதியை மாற்றியிருக்கும் செய்திக்கு அறிவிப்பு எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை.
-----------------------------------------
"ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தைத் தொடர்புகொண்டு வினவியபோது, வரும் 26ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படும் என்று தெரிவித்தார்கள்" என்ற செய்தியை அறியும்போது மக்களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்படத்தானே செய்யும்.
மக்கள் எல்லோருமே! ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் படுகிறார்கள்.
வீட்டு கட்டுமான வேலைக்கு விட்டவர்களிலிருந்து - கடற்கரைக்கு வாக்கிங் போகிறவர்கள் வரை பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
அட ...என்னப்பா கடற்கரைக்கு வாக்கிங் போக மின்சாரம் தேவையா ? என்று கேட்காதீர்கள் !!!!!!!!!!!!!!!!!!!
இன்று (வியாழக்கிழமை) காலை வாக்கிங் போனபோது கடற்கரையில் மிகுதமான பெண்களை காண முடியவில்லை. காரணம் கேட்டபோது சொன்னார்கள், இன்று பராமரிப்புக்காக மின் விநியோகம் இருக்காது.
அதனால் மிக்சியில் அரைக்கிறது முதல் வாஷிங் மெசினில் துணி துவைப்பது வரை எல்லா வேலைகளையும் 8 மணி ( மின்சாரம் துண்டிக்கபடுவது )க்குள் செய்தாக வேண்டும்.
மின் நிலையத்திற்கு இன்று பராமரிப்பு நாள் - பெண்களுக்கு பரபரப்பு நாள்! என்றார்கள். ஆகையால் மின் வாரியம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும்.
-------------------------------------------
பொது மக்களே!
நமது நகராட்சி சீரானால் - மின்வாரியமும் சீராகும்.
அதென்னங்க .................. அப்துல் காதருக்கும் - அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள் !!!!!!!!!!!!!!!!!!
மின்சார துண்டிப்புக்கும் - வாக்கிங்குக்கும் உள்ள மாதிரிதான் இதற்கும் சம்பந்தம் உண்டுங்கோ. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross