இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் கோபுரங்களிலும் கதிர்வீச்சு அளவை - அந்த மொபைல் கோபுர உரிமையாளர்களே - பரிசோதித்து, சுய
சான்றிதழ் நவம்பர் 2010 க்குள் வழங்கிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இறுதி நாள்
தாண்டிய பிறகும் - இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 5.62 லட்ச மொபைல் கோபுரங்களில், சுமார் 1.3 லட்ச கோபுரங்கள் குறித்த சுய சான்றிதழ் பெறப்படவில்லை
என மத்திய தொலைதூர தொடர்பு துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.
காயல்பட்டினத்தில் உள்ள மொபைல் கோபுரங்கள் குறித்த சுய சான்றிதழ்களை காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில்
உள்ள மத்திய அரசு நிறுவனமான TERM யிடம் இருந்து பெற்றுள்ளது. கோபுரங்களின் உயரம், கதிர் வீச்சு அளவு போன்ற விரிவான தகவல்கள்
பெறப்பட்டுள்ளன.
தகவல் வழங்கி உள்ள அனைத்து நிறுவனங்களும் தாங்கள் விதிமுறைக்கு உட்பட்ட அளவே கதிர் வீச்சை இயக்குவதாக
தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெறப்பட்ட தகவல்களின் சாராம்சம் வருமாறு:-
காயல்பட்டினத்தில் ஏழு நிறுவனங்கள் மொபைல் கோபுரங்களை நிறுவி உள்ளன. அவை -
(1) Aircel
(2) Airtel
(3) Bsnl
(4) Idea
(5) Reliance
(6) Tata
(7) Vodafone
இதில் அதிகப்படியாக Airtel நிறுவனம் 5 இடங்களிலும், Tata நிறுவனம் 4 இடங்களிலும், Bsnl நிறுவனம் 3 இடங்களிலும், Aircel, Idea,
Reliance நிறுவனங்கள் 2 இடங்களிலும், Vodafone நிறுவனம் 1 இடத்திலும் காயல்பட்டினத்தில் மொபைல் கோபுரங்களை நிறுவி உள்ளன.
[தொடரும்]
|