காயல்பட்டினத்தின் முதல் மொபைல் கோபுரம் BSNL நிறுவனத்தால் ஜூன் 5, 2003 அன்று - அதன் காயல்பட்டின வளாகத்திலேயே துவக்கப்பட்டது. அதனை தொடர்ந்து Aircel நிறுவனம் மே 4, 2004 அன்று தனது கோபுரத்தை விசாலட்சுமி கோயில் தெருவில் உள்ள செட்டியார் நிலத்தில் நிறுவியது. மூன்றாவதாக நவம்பர் 20, 2004 அன்று Airtel நிறுவனம் வண்ணக்குடி தெருவில் உள்ள முர்ஷிதா கட்டிடத்தில் தனது கோபுரத்தை நிறுவியது.
CDMA தொழில்நுட்பத்தில் இயங்கும் Tata கோபுரம் பிப்ரவரி 23, 2005 அன்று Aircel கோபுரம் இருக்கும் விசாலட்சுமி கோயில் தெருவில் உள்ள செட்டியார் நிலத்தில் நகரின் நான்காவது கோபுரமாக நிறுவப்பட்டது. இரு மாதங்கள் கழித்து ஏப்ரல் 28, 2005 அன்று CDMA தொழில்நுட்பத்தில் இயங்கும் Reliance கோபுரம் கூலக்கடை பஜாரில் நிறுவப்பட்டது. Vodafone தற்போது பயன்படுத்தும் மொபைல் கோபுரம் செப்டம்பர் 30, 2005 சுயேஸ் கார்னரில் நிறுவப்பட்டது.
தொடர்ந்து வந்த கோபுரங்களும், நாளும் , இடங்களும் வருமாறு:-
(7) Airtel கோபுரம்
தேதி: நவம்பர் 30, 2006
இடம்: நூர் மன்ஜில், 94 G/H தைக்கா தெரு
(8) BSNL கோபுரம்
தேதி: ஜனவரி 13, 2007
இடம்: ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ்
(9) Airtel கோபுரம்
தேதி: ஜூலை 25, 2007
இடம்: ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ்
(10) Reliance (GSM) கோபுரம்
தேதி: அக்டோபர் 20, 2008
இடம்: கூலக்கடை பஜார்
(11) BSNL கோபுரம்
தேதி: டிசம்பர் 31, 2008
இடம்: கூலக்கடை பஜார்
(12) Reliance கோபுரம்
தேதி: மார்ச் 3, 2009
இடம்: முனிசிபல் அலுவலகம்
(13) Tata கோபுரம்
தேதி: ஏப்ரல் 24, 2009
இடம்: ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ்
(14) Airtel கோபுரம்
தேதி: ஏப்ரல் 25, 2009
இடம்: பேயன்விளை
(15) Tata கோபுரம்
தேதி: மே 14, 2009
இடம்: முர்ஷிதா கட்டிடம், வண்ணக்குடி தெரு
(16) Aircel கோபுரம்
தேதி: ஜூலை 11, 2009
இடம்: அஹ்மத் நெய்னா பள்ளி
(17) Idea கோபுரம்
தேதி: அக்டோபர் 24, 2009
இடம்: முர்ஷிதா கட்டிடம், வண்ணக்குடி தெரு
(18) Idea கோபுரம்
தேதி: அக்டோபர் 25, 2009
இடம்: நூர் மன்ஜில், 94 G/H தைக்கா தெரு
(19) Tata கோபுரம்
தேதி: மார்ச் 20, 2010
இடம்: நூர் மன்ஜில், 94 G/H தைக்கா தெரு
(20) Airtel கோபுரம்
தேதி: செப்டம்பர் 22, 2010
இடம்: செய்யத் ஆலிம் காலனி (மாட்டுக்குளம் அருகில்)
[தொடரும்]
|