காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில், மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் கந்தூரி நிகழ்ச்சிகளின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் 19.03.2011 (நேற்று) நடைபெற்றது. நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை அமர்வில் (துஆ மஜ்லிஸ்) பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கந்தூரி நிகழ்ச்சிகள் 07.03.2011 முதல் 20.03.2011 தேதி வரை நடைபெற்றது.
தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், காலை 07.00 மணிக்கு முஹ்யித்தின் ஆண்டகை அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.
10.03.2011 முதல் 18.03.2011 வரை தினமும் இரவு 08.45 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
10.03.2011 வியாழக்கிழமை பின்னிரவு 08.45 மணிக்கு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ “நன்மறை குர்ஆன் ஒரு பன்முகப்பார்வை” என்ற தலைப்பிலும்,
11.03.2011 வெள்ளிக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “அருள்மறை குர்ஆனும், ஆத்மீக ஞானமும் - ஓர் ஆன்மிகப் பார்வை” என்ற தலைப்பிலும்,
12.03.2011 சனிக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர்கள் மவ்லவீ எம்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபழ் ஏ.நாகூர் மீரான் சிராஜீ ஆகியோர் “அருட்திரு குர்ஆனும், அறிவியலும் - ஓர் அறிவியல் பார்வை” என்ற தலைப்பிலும்,
13.03.2011 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, “சதுர்மறை குர்ஆனும், சமுதாய இயலும் - ஒரு சமூகப் பார்வை” என்ற தலைப்பிலும்,
14.03.2011 திங்கட்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்க் இஸ்மாஈல் ஃபைஜீ, “வான்மறை குர்ஆனும், வரலாறும் - ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பிலும்,
15.03.2011 செவ்வாய்க்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “நன்மறை குர்ஆனும், நற்பண்புகளும் - ஒரு பண்பியல் பார்வை” என்ற தலைப்பிலும்,
16.03.2011 புதன்கிழமை பின்னிரவில், மஹ்ழரா துணை முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, “உயர்மறை குர்ஆனும், உவமைகளும் - ஓர் ஆய்வுப் பார்வை” என்ற தலைப்பிலும்,
17.03.2011 வியாழக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ, “மாமறை குர்ஆனும், மணவாழ்க்கையும் - ஒரு நல்லறப் பார்வை” என்ற தலைப்பிலும்,
18.03.2011 வெள்ளிக்கிழமை பின்னிரவில், மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ “புனித குர்ஆனும், மனித நேயமும்” என்ற தலைப்பிலும்,
அதே நாளில், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ, “கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சரிதம்” என்ற தலைப்பிலும் சன்மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
19.03.2011 சனிக்கிழமையன்று மாலையில் கந்தூரி தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலை 04.30 மணிக்கு மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும், இரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை துஆ பிரார்த்தனை மஜ்லிஸும் நடைபெற்றது.
மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ, உலக சமாதானம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, நோயற்ற வாழ்வு, தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட நகர மக்களின் பல்வேறு தேவைகளை முன்வைத்து துஆ இறைஞ்ச, குழுமியிருந்த அனைவரும் “ஆமீன்” கூறி பிரார்த்தித்தனர்.
மறுநாள் 20.03.2011 ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) காலை ஃபஜ்ர் தொழுகை முடிவுற்றதிலிருந்து 09.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தகவல்:
மஹ்ழரா கந்தூரி கமிட்டி சார்பாக,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
K.M.T.சுலைமான்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
மற்றும்
ஹாஜி J.M.அப்துர்ரஹீம்,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |