கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 18ஆவது செயற்குழுக் கூட்டம் 20.03.2011 அன்று காலை 11.00 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது. துவக்கமாக, கூட்டத்தலைவரும் மன்றத் தலைவருமான மஸ்ஊத் துவக்கவுரையாற்றினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த 27.02.2011 அன்று நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின் போது இரவு உணவு ஏற்பாடு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட தொகை, அவை செலவழிக்கப்பட்ட விபரம் உள்ளிட்ட வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் சமர்ப்பித்து, விளக்கிப் பேசினார். கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.
“புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு அறிமுகம்:
பின்னர், அண்மையில் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று!” குறுந்தகடு குறித்து மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் யு.எல்.செய்யித் அஹ்மத் விளக்கிப் பேசினார். அவரது விளக்கவுரையைத் தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அக்குறுந்தகடை ஆர்வத்துடன் வாங்கினர். பின்னர் தலைவர் மஸ்ஊத் துஆவுடன் கூட்டம் மதியம் 01.15 மணிக்கு நிறைவுற்றது.
மருத்துவ உதவி:
இக்கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர் ஒருவரது குடும்பத்திலுள்ள நோயாளியின் மருத்துவ செலவினங்களுக்காக ரூ.20,000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தகவல்:
K.Mமுஹம்மத் ரஃபீக் (KRS)
மற்றும்
S.Iசெய்யிது ஐதுரூஸ் (SEENA)
செய்தித் தொடர்பாளர்கள்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |