ரஃப்யாஸ் ரோஸெரி மழலையர் மாறு உடையணிதல் (பேன்ஸி டிரஸ்) போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த உடைகளுக்கு பொருத்தமான வகையில் அழகுற பேசி அனைவரையும் அசத்தினர். இதில் முஹைதீன் மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியைகள் செல்வி.விஜயலட்சுமி, திருமதி.கனி ஆகியோர் நடுவர்களாக கலந்து சிறப்பித்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்றவர்கள் விபரம் :-
ஜுனியர் குழந்தைகள் பிரிவில்
முதலாவது பரிசு அத்னான்
இரண்டாவது பரிசு செய்து ஆசியா மற்றும் அகஸ் அகமது
மூன்றாவது பரிசு மறியம் ஜெய்னப் மற்றும் இஃப்ரா
சீனியர் குழந்தைகள் பிரிவில்
முதலாவது பரிசு ஹைதர் அலி ஷஹீக், மறியம் வசீமா, அஸ்மியா
இரண்டாவது பரிசு ஜி.எம். அபூபக்கர், மஹ்மூது அல்தாஃப்
மூன்றாவது பரிசு ஷேக் முஹம்மது, ஹஸன் ஜீமைல்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி.எம்.ஐ.ஆபீதா ஷேக் பி.எஸ்.இ., பி.எட்., செய்திருந்தார்.
2. வேட்டை(ஆடு)...விளையாடு...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[20 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3413
சபாஷ்...!!! சரியான நேரத்தில் தான் இந்தப் போட்டியை வெச்சிருக்காங்க!மாறுவேடம் அணிந்து மக்கள் மத்தியில் கூறுகெட்ட அரசியல் குள்ள நரிகள் தேர்தல் வேட்டைக்காக புறப்பட்டு விட்டார்கள் என்பதை நினைவு படுத்தும் விதம் நம் மழலைகள் மாறுவேடமிட்டு நமக்கு உணர்த்தியதைப் போல் உள்ளது.இது தேர்தல் காலம் எனவே எங்கு பார்த்தாலும் அந்த நொடி தான் வீசுகின்றது,பார்த்தீங்களா?கமெண்ட்ஸ்லெ கூட அது தான் வருகிறது.
3. குழந்தை பருவம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3444
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் ஜியாவுதீன் சொல்வது போல் குழந்தைகள் மாறு வேடம் போட்டிருந்தாலும் அவர்கள் "குட்டு " வாங்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் அதுவும் சிறு குழந்தைகள்.
மாறு உடையணிதல் என்றாலே ஆண், பெண் உடையும் - பெண், ஆண் உடையும் அணிதல்தான் அது மட்டுமல்ல சென்ற வருடம் இந்த பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாறு வேடமிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனால் இதுவும் மாறு வேடமாகத்தான் இருக்கக்கூடும்.
----------------------------------------
எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது பாவமற்றவர்களாகவே (இஸ்லாமாக) பிறக்கிறார்கள். பின்னர் அவர்களின் பெற்றோர்தான் அவர்களை, " யூதராகவோ " , " கிறிஸ்தவராகவோ" அல்லது "நெருப்பை " வணங்குகிறவர்களாகவோ மாற்றுகின்றனர் என்று, மார்க்கம் தெளிவாக கூறுகிறது.
ஆகையால் பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு மார்க்கம் அனுமதிக்கின்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு கல்வியை புகட்ட வேண்டும்.
----------------------------------------
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் :
" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப்
பயிற்சியுமேயாகும் ". ( மிஷ்காத் )
" பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள் " என்பது புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீத் கிரந்தங்களில் வரும் ஒரு ஹதீதின் சுருக்கம்.
குழந்தைகளைக் கண்காணித்து வளர்ப்பதும், அவர்களுக்கு கல்வியும் ஒழுக்கப்பயிற்சியும் அளிப்பதுமான இரட்டைப் பொறுப்பு தாயைச்
சார்கின்றது.
இந்த பொறுப்பை பற்றி மறுமை நாளில் அல்லாஹ்! விசாரிப்பான் என்பதை பெற்றோர்களே! மறந்திட வேண்டாம்.
----------------------------------------
மழலையர் பள்ளி:
இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டவரை மக்களிடம் நல்ல மதிப்புகள் உண்டு.
இருந்தாலும் பள்ளியின் நிர்வாகம் மார்க்க வரம்பை மீறாது கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மழலை பருவம், குழந்தை பருவம் என்கின்ற 1 முதல் 5 வயது வரை உள்ள வளர்ச்சிதான், மிகவும் முக்கியமானது. இந்த வயதிலேதான் மார்க்க
சம்பந்தமான போதனைகளை தொடங்கிட வேண்டும்.
எனவே இதை மனதில் நிலை நிறுத்தி பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் பள்ளியும் சிறந்து விளங்கி, நல்ல மாணவ மணிகளை உருவாக்கிட முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross