காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் “புற்றுக்கு வைப்போம் முற்று!” என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு, கடந்த 13.03.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் அதன் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.
இக்குறுந்தகடுகள் தற்போது நகரின் பின்வரும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது:-
(1) ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை
(2) ஹனீஃபா கிஃப்ட் சென்டர், பிரதான வீதி
(3) ஃபஸீஹா ஏஜென்ஸீஸ் (கே.எம்.டி.சுலைமான்), நெய்னார் தெரு
(4) மன்னர் ஜுவல்லர்ஸ், ஸீ-கஸ்டம்ஸ் சாலை.
பிரதி ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 20 என தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் நிதியாதாரம், நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களில் சிலருக்கு செலவிடப்படும் என ஆவணப்பட தயாரிப்பாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ தெரிவித்துள்ளார். |