தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்தார். தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:
ஜெனிபர் சந்திரன் (தூத்துக்குடி)
சொந்த ஊர்: திருச்செந்தூர், கல்வி: டிசிஏ, டிஎச்ஏ பட்டயப் படிப்புகள், குடும்பம்: கணவர்-சந்திரன், விவசாயம், மகன்- விஜயன் எம்.பி.ஏ படித்துவிட்டு சொந்த தொழில் செய்து வருகிறார்.
கட்சிப் பொறுப்பு: திமுகவின் நீண்ட கால உறுப்பினரான இவர் கடந்த 1996ம் ஆண்டு திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் மாநில மீனவர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்தார். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டு சில மாதங்ளில் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி. சண்முக நாதன் (ஸ்ரீவைகுண்டம்)
வயது 57, கல்வித் தகுதி: 9ம் வகுப்பு, ஊர்: பண்டாரவிளை, தொழில்: முழு நேர அரசியல், குடும்பம்: மனைவி-ஆஷா சண்முகநாதன், 5 மகள்கள், 1 மகன்
கட்சி பொறுப்பு: அதிமுகவில் நீண்டகால உறுப்பினர், ஸ்ரீவை ஒன்றியச் செயலாளர், 3வது முறையாக மாவட்ட செயலாளர். 2001 தேர்தலில் ஸ்ரீவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கைத்தறித் துறை அமைச்சரானார். 2006ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 3ம் முறையாக ஸ்ரீவை தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர். மனோகரன் (திருச்செந்தூர்)
வயது 31, சொந்த ஊர்: உடன்குடி தேரியூர், கல்வி: எம்பிஏ. டிஎஸ்எச், தொழில்: தேங்காய் மொத்த வியாபாரம், குடும்பம்: மனைவி அனுஷ்யா, 5 மாத குழந்தை
கட்சி பதவி மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர்.
என் சின்னத்துரை (ஓட்டப்பிடாரம் - தனி)
வயது: 39, ஊர்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தளவாய் புரம், கல்வி: டிஇஇ, தொழில்: விவசாயம், குடும்பம்: மனைவி-கோகில வர்த்தினி, மகள்- அபிஷா, மகன் அஸ்வின் ராஜா
கட்சிப் பொறுப்பு: 1988ம் ஆண்டு முதல் உறுப்பினர். 1988ல் தளவாய்புரம் கிளைச் செயலாளர். 1991ல் ஸ்ரீவை ஒன்றிய பிரதிநிதி. 1996 தளவாய்புரம் கிளைச்செயலாளர். 2000ல் ஸ்ரீவை ஒன்றிய ஜெ பேரவைச் செயலாளர். 2002 முதல் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர். 2006 முதல் மாவட்ட ஊராட்சித் தலைவர்.
ஜி.வி. மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்)
வயது 34, தொழில்: ஒப்பந்ததாரர், குடும்பம்: மனைவி ரேபேகா அனிதா, மகன் அக்ஷய்
கட்சிப் பொறுப்பு 1997ம் ஆண்டு முதல் உறுப்பினரானார். 2000ல் விளாத்திகுளம் வழக்கறிஞர் அணி பொருளாளர். 2001 முதல் புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர். 2004 முதல் மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர். 2010ல் விளாத்திகுளம் தொகுதி செயலாளர்.
கடம்பூர் சி. ராஜ் (கோவில்பட்டி)
வயது 52, கல்வி: பியூசி, ஊர்: கே.சிதம்பரா புரம், தொழில்: கடம்பூரில் பெட்ரோல் பங்க், கே.சிதம்பராபுரம் இந்து துவக்கப்பள்ளி செயலாளர். குடும்பம்: மனைவி இந்திராகாந்தி, மகன் அருண்குமார், மகள் காயத்ரி
கட்சிப் பொறுப்பு: 1978 முதல் கயத்தார் இளைஞர் அணி ஒன்றிய பொருளாளார். 30 ஆண்டுகள் சிதம்பரபுரம் கிளைச் செயலாளர் 2004ம் ஆண்டு முதல் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர். தற்போது மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்.
தகவல்:
www.tutyonline.net |