Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:35:43 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5802
#KOTW5802
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 16, 2011
முஸ்லிம் லீகுக்கு மீண்டும் 3 இடம்! தொகுதிகள் விபரம் வெளியீடு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4065 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு பிரச்சனையில் தனக்கு கொடுக்கப்பட்ட 3 தொகுதிகில் ஒரு தொகுதியை காங்கிரசுக்கு கொடுப்பதாக முஸ்லிம் லீக் அறிவித்திருந்தது. இம்முடிவு குறித்து முஸ்லிம் லீக் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையில் நேற்று தி.மு.க. - அதன் கூட்டணியில் நிற்கும் கட்சிகளின் தொகுதிகள் விபரங்களை வெளியிட்டது. அதில் மீண்டும் முஸ்லிம் லீகுக்கு 3 இடங்கள் வழங்கியுள்ளது.

முஸ்லிம்லீக் நிற்கும் மூன்று தொகுதிகள் வருமாறு:-

(1) துறைமுகம் (சென்னை)
(2) வாணியம்பாடி
(3) நாகப்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. good news for iuml
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [16 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3303

IT IS VERY GOOD NEWS FOR IUML.WE WILL SUPPORT ALL OUR MUSLIM CANTIDATES(IF THEY ARE ANY POLITICAL PARTIES).IN THIS ELECTION,INSHA ALLAH, ALL OUR MUSLIM CATIDATES SHOULD WIN.ALL THE BEST WISHES TO WIN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. To be supported
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [16 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3306

Dear All Muslims,

It is obligatory to support to Muslim League as a muslims political party. It is a parent muslims party in our state & country.

All the remaining recent domains (in the name of muslim party) are to be joined under muslim league. We have to reflect our unity in the assembly.

Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உம்மியை ஊதி ஊதி.....
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [16 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3308

ஆஹா! முஸ்லிம் லீக் திமுகவிற்கு விட்டுக் கொடுக்க, மீண்டும் திமுக முஸ்லிம் லீக்கிற்கு விட்டுக் கொடுத்துள்ளது. சந்தோஷம்.

துறைமுகம், வாணியம்பாடி மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மூன்று தொகுதியிலும் யார் விட்டுக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன்தான் சின்னம்.

இத்தொகுதிக்காக எந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் திமுக உறுப்பனராக போகிறார்கள் என்பதை அறிய மனம் ஆவலாக உள்ளது(!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அருமை தம்பி
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [16 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3310

தற்போதைய அதிகாரமற்ற செய்தி - முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிதானாம். ஆனால் கலைஞர் முன்னிலையில் மிகச் சமீபத்தில் முஸ்லிம் லீக்கில் இணைந்த திருப்பூர் அல்தாஃபிற்க்கு ஒரு சீட்டு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடுங்கிய சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் கலைஞர் முஸ்லிம் லீக்கிற்கு அருமை தம்பியை கொடுத்துள்ளேன் என்று சொன்னதின் அர்த்தம் இதுதானோ? பொருத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிடாங்க....
posted by முத்துவாப்பா...... (al khobar) [16 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3311

"எவ்ளவு பிடிங்கினாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லி கூடுதலா ஒரு சீட் கொடுத்துட்டாரு கலைஞர் அதுவும் அன்பழகனோட சென்னை துறைமுகம் தொகுதி.

உடனே முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது என்று நாம் மார் தட்டலாம். ஆனால் முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற இந்த தொகுதியை ஏன் தி.மு.க. விட்டு கொடுத்துள்ளது என்று கொஞ்சமாவது நாம் சிந்திக்க வேண்டாமா..? அன்பழகன் மட்டுமல்ல கலைஞரே இந்த தொகுதில இப்பம் நின்னாலும் டவுசர் கிழிய போறது உறுதி,

ஏன் என்றால் இந்த தொகுதியில் படித்தவர்கள் அதிகம் இருப்பதாலும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரம் இங்கு பெரிதாக எதிரொலிக்கும் என கருதப்படுவதாலும் தான் இந்த தொகுதி முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நொங்கு தின்னவன் ஓடி புட்டான், அதை நோண்டி தின்னவன் மாட்டிகிட்டான் கதையா முஸ்லிம் லீக் துறைமுக தொகுதில மாட்டிகிட்டு.

அப்புறம் கலைஞருக்கு ஒரு கடிதம்..

என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்.. இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..... டவுசர் கிழிந்தபின் இதை அறிவித்தால் ரசிக்கும்படி இருக்காது....

தமிழுக்காக திருவள்ளுவர் சிலை வைத்து விட்டீர்கள்...

பல கோடி வசூல் செய்து. செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....

ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்....

இலவச அரிசியும் கலர் டிவியும் கொடுத்து தமிழனை வாழ வைத்து விட்டீர்கள்...

ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...

வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...

சோனியாவின் காலில் விழுந்து, அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...

போதும் கலைஞரே... உங்கள் தமிழ் தொண்டும்... அண்ணா பெரியார் வழி அரசியல் தொண்டும் எங்களை திக்கு முக்காட வைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்... 6 வது முறையும் முதல்வராகி இன்னும் எங்களை உங்கள் தமிழ் தொண்டால் திக்கு முக்காட செய்யாதீர்கள்...

இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
முத்துவாப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. திமுகவை எதிர்த்து கருத்துகளை விட்டால் மட்டும் போதாது
posted by mohamed (India) [16 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3313

திமுக முஸ்லிம்களுக்கு செய்த தவர்களை சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது அதிமுக செய்த தவறு இதவிட அதிகம் தான் .முஸ்லிம்களுக்கு அதிகமாக திமுக தான் சலுகை செய்த வந்து உள்ளது , இதை யாராலும் மறக்க முடியாது .நம் ஊரில் மற்றும் நம் சமுதாயத்தில் நடக்கும் போட்டி பொறமை விடவா இந்த அரசிலில் இருக்கிறது ? அப்படியானால் அணைத்து முஸ்லிம் ஓன்று சேர்ந்து எந்த கட்சிக்கும் சார்ந்து இல்லாமல் தனியாக நின்றால் மட்டுமே தீர்வு காணும் . முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக இல்லாமல் மற்ற வேற புதிய தேர்வு பண்ண வேண்டும் . போதாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒரு துரோக வரலாறு Part-01
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [16 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3314

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.

1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.

இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர்.

காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.

காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.

திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக்.

திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.

முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்!

1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில்தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.

காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.

ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார்.

என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.

இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.

“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார்.

காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன.

இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்டபோது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில்.

அரசியல்வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்” என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ்.

காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.

மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.

மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.

தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.

திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?

கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.

1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.

கருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.

எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.

இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?

-இன்ஷா அல்லாஹ் தொடரும்...

நன்றி: www.tmmk.in

Moderator: பிற வலைதளங்களிலிருந்து கருத்துக்களை மேற்கோள் காட்ட விரும்புவோர், அந்தந்த வலைதளங்களிலேயே பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அவற்றின் இணைப்புகளை (links) மட்டும் அனுப்பி வைத்தாலே போதுமானது. முழு தகவல்கள் இப்பகுதியில் இனி பிரசுரிக்கப்படாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சந்தர்ப்பவாதம்
posted by seyed ahmed (Dammam) [16 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3315

இப்னு சாஹிப் கட்டுரை பதிவு செய்த்ததின் மூலம் TMMK இன் சந்தர்பவாதம் அம்பலமாகி உள்ளது.

யப்பா… இப்னு சாஹிப், இந்த வரலாறு நல்ல இருக்கு. இது தெரிந்தும் ஏன் போன தடவை கொஞ்சி குலாவி ஆதரவு கொடுத்து யாரும் நடத்தாத விழா நடத்தினார்கள்? போப்பா நீயும் உன் கட்சியும். எல்லாம் சந்தர்ப்பவாதம்.

உங்க பழசை கிளறினால் நாற்ற மெடுக்கும். ஜாக்கிரதை. பல சமுதாய கட்சி ஆரம்பம் செய்து பிரிவினை செய்வதே நீங்க தான். இப்பவாவது தேசிய லீக் சேர்ந்துள்ளது, அதான் பொறாமை.

இதனை வரலாறு இன்று எழுத்பவர்கள், இத்தனை நடந்த பின்பும்,

1) ஏன் DMK முன்பு கொஞ்சி குலாவினார்கள்?
2) ஏன் பாராட்டு விழா மிக பயங்கரமா நடத்தினார்கள்?
3) வக்ப் போர்டு கேட்டு பெற்றார்கள்?
4) ஏன் கடந்த தேர்தலில் அதிக சீட் கேட்டு கூட்டணியில் இருக்க துடித்தார்கள்?
5) அதிக சீட் கொடுத்து இருந்தால், இன்று வரி இந்த கூட்டணி இல் தான் இருந்து இருப்பார்கள்? அப்போது கட்டுரை வேற மாத்ரி இருக்கும்?

நீங்கள் எந்த கூட்டணியிலும் இருங்கள், ஆனால் மாற்றி மாற்றி பேசி சந்தர்பம் அரசியல் வேண்டாம். நண்பா...

இது போன்று கட்டுரை தொடர்ந்தால், நாமும் TNTJ சார்ந்த வலை தளங்களில் இருந்து TMMK பற்றிய துரோகங்கள் எழுதுவோம்.

பாபர் மசூதி இடிப்புக்குப்பின். பத்து ஆண்டுகளாக (ஓவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும்) தொடர்ந்து குரல் கொடுத்த வந்த, பாபர் மசூதிக்காக எங்களைப் போல் யாரும் போராடியதில்லை என்று பெறுமை பேசிக்கொண்ட த,மு,மு,க, இப்போது பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து, அந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட செங்கற்களை அனுப்பிய அ,தி,மு,க,வுடன் கூட்டணி வைத்துள்ளது, இதில் குறிப்பிட்டுச் சொல் வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பாபர் மசூதி இடிப்பை கண்டித்த போது, அதை “ஆதரித்த ஓரே தலைவர் ஜெயலலிதாதான், வாழ்க! த,மு,மு,க,வும் அதன் சந்தர்ப்பவாத கொள்கைகளும்!! அதிமுக விற்கு ஜால்ரா அடிக்கவே சில கவிகள் உள்ளதே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. REAL VICTORY IS IN OUR HAND OF UNITY
posted by M.E.MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [16 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3317

ASSALAU ALAIKKUM.VARAH.

This is not a permenant solution for our whole muslim community untill otherwise ,if we not in one line of UNITY,We will be isolated.

Any have we r all must support to our muslim brothers and less disadvandage political party in this election.This is only the temperary support.

If any one or IUML is real muslim comunity party means very first they have to conform their party name of UNION [UNITY]with in our all Jamath, and islamic party or organisation thru several visit and Jumma speach.



Then they can start to work on the politics.Now very serious matter is our UNITY not political issue.If unity formed then everythink come under us, Also we can stand alone in our own logo and show our power to others. vassalm


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. விதண்டாவாதம்
posted by kavimagan (dubai) [16 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3319

தூங்குபவர்களை எழுப்ப முடியும். பாசாங்கு செய்பவர்களை?. அரைத்த மாவையே அரைக்கின்ற சில அறிவுஜீவிகளுக்கு, முஸ்லிம் லீக்கிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா? என்ற செய்திக்கான கருத்தோட்டத்திலேயே தெளிவாக பதில் சொல்லப்பட்டு விட்டது.

நாயகம்(ஸல்) அவர்களது பொன்வாக்கினை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு,அதற்கு தப்பு தப்பாய் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யும் சிலரை நினைத்து பரிதாபப்படுவதா? பரிகாசித்து எழுதுவதா?

கருத்துக்கு, கருத்துரைக்கத் தெம்போ திராணியோ இல்லாத இவர்கள், தனிநபர்த் தாக்குதலில் இறங்கி இருக்கின்றார்கள்.

ஒரு தலைப்பில், ஏற்கனவே விவாதம் செய்து, பதில் அளிக்காமலேயே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியவர்கள், குறுக்குப்பாதையில் அடுத்த தலைப்பிற்குள் நுழைந்திருக்கின்றார்கள்.

அன்புச் சகோதரர்களே! தயவு செய்து மீண்டும் இந்த இணைப்புகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

இவர்களது லட்சணம் புரியும். posted by: kavimagan (dubai)
ip address: (86.97.115.83 UNITED ARAB EMI )
ip address: (86.96.228.87 UNITED ARAB EMI )

posted by: seyed mohamed (Dammam) on Tuesday, March 15, 2011
ip address: (2.88.98.122 SAUDI ARABIA)

posted by: kavimagan (dubai) on Wednesday, March 16, 2011
ip address: (92.98.127.49 UNITED ARAB EMIRATES


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சமுதாயேமே
posted by Siddiq (Chennai) [17 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3323

அஸ்ஸலாமு அழைக்கும் . முஸ்லீம் லீக்குக்கு மூன்று தொகுதியா? கட்சியில் உறுப்பினரே இல்லாமல் கட்சின் தலைவர் பதவி வகிக்க முடியும் அப்படி பட்ட கட்சிதான் முஸ்லீம் லீக் .மேலும் கருணாநிதி காட்டும் வேட்பாளரே நிருத்தபடுவார் . தி.மு.க அரசு இஸ்லாத்திற்கு எதிராக நடக்கும் பட்சத்தில் இவர்கள் குரல் கொடுப்பதே இல்லை. இன்றைய நிலையில் வீட்டுக்கு ஒரு குடிகாரன் தந்த பெருமை கருணாநிதியே சேரும். நேற்று, இன்று முளைத்த கட்சிகளே ஜொலிக்கும் போது உங்களால் அறுபது ஆண்டுகள் ஆனா பிறகும் உங்களால் ஜொலிக்க முடியவில்லையே? என்றாவது சிந்தித்து உண்டா? அவன் நல்லவன் இவன் நல்லவன் என்று பல்லாக்கு தூக்கி தூக்கி வீண் போன சமுதாயேமே நீ எப்போது பல்லாக்கில் ஏற போகிறாய் . தி.மு.க , அ.தி.மு.க , காங்கிரஸ் எல்லாம் ஓரே குட்டையில் ஊரிய மட்டைதான். நாம் ஒன்று தனியாக தேர்தலில் நிற்கணும் அல்லது கூட்டணி என்றால் பா. ம .க போன்று தேர்தல் தேர்தலுக்கு பல்டி அடிப்பது சிறந்தது. கூட்டணி என்று முடிவுடுத்தால் மானம் ரோசம் பார்த்தால் இங்கு பருப்பு வேகாது. ஆனால் தனி சின்னத்தில் நிற்க வேண்டும். நிற்க முடியும்.

" உன்னை சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லி சொல்லி உன்னை சோம்பேறியாக கோழையாக ஆக்கிவிட்டான்.... " எங்கையோ கேட்டகுரல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அறிவுஜீவிகள்......
posted by முத்துவாப்பா...... (al khobar) [17 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3324

சகோதரர் கவி மகன் காக்கா அவர்களுக்கு , நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள் , சில அறிவுஜீவிகள் யார் என்ன கருத்து சொன்னாலும் அதுக்கு வியாக்கியானம் கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்,நாம் அதைக்கண்டு மவுனம் ஆகிவிட கூடாது.உங்களை விமர்சிக்கும் அந்த அறிவுஜீவின் கருத்துகளை சற்று பின் சென்று பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர் நிலை பற்றி , முதலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார், அப்புறம் சுயேட்சையா நிக்கனும் அப்படினு கருத்து சொல்லிட்டு இருந்தார்,இப்பொழுது கலைஞருக்கு துதி பாடி கொண்டு இருக்கிறார்.எனக்கும் முதலில் இவருடைய கருத்துகளை பார்த்து கோவம் வரத்தான் செய்தது அப்புறம் இவருடைய மாறுபட்ட மனநிலையை பார்த்து பரிதாபப்படத்தான் தொன்றிற்று.ஆகையால் தங்களது பொன்னான நேரத்தை இவருக்கு பதில் எழுதி வீணாக்காதீர்கள்.நாங்கள் தங்களிடமிருந்து பல கவிகளையும் பல நல்ல கருத்துகளையும் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்
முத்துவாப்பா.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நல்ல திட்டங்களை மறைக்க முடியாது
posted by seyed mohamed (Dammam) [17 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3327

துண்டை காணோம் துணியை காணோம் என்று போனது யார் ? இந்த ஐந்து வருடத்தில் உள்ள நல்ல திட்டம் பற்றி விவாதம் பண்ணாமல்,

தினமலர் போன்ற பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள், வாசக கருத்துகள், ஈமெயில் களில் வரும் கட்டுரைகளை பக்கம் பக்கமா போட்டு குழப்பினாலும் நல்ல திட்டங்களை மறைக்க முடியாது.

கவிமகன் அவர்களே, நாங்கள் திசை திருப்பவில்லை. உங்களின் அம்மாவின் கண்மூடிதனமா நேசத்துக்கு தான் பரிதாபம். குதிரைக்கு கடிவாளம் மாத்ரி ஒரே பார்வை கூடாது. விவாதம் என்று வரும் போது தாங்கள் மட்டும் பல விஷம் பேசலாம், நாங்கள் பேச கூடாதோ?

நண்பர் அனுப்பிய மற்றுமொரு ஹதீத் தாங்களே பார்க்கவும்.

Al-Bukhaari (4425) narrated that Abu Bakrah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “No people will ever succeed who appoint a woman as their leader.”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. our votes to idle or support party not to enemy
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [17 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3330

Dears

ADMK Cheif sent the Karasave to demolish the Babri Masjid.

The same head welcomed the judgement of babri masjid.

The recent domains (in the nmae of muslim party) are against to the above two points.

At the same time they have alliance with them.

What is the fair?

Our muslim people to devote our votes not to the enemy, they can contribute to our parent mulim party or its allainces.

Allah will hedaya to our ummath to be on one path.

Wasalam.

Mohamed Abdul Kader


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. அரசியல் தனித்தன்மை
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [17 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3332

சகோ. செய்யது அஹமது அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்...

நம்மூர் மஹ்லராவிலிருந்து ஜாமில் அஸ்ஹர் வரைக்கும், ஜலீல் முஹைதீனிலிருந்து ஹாமித் பக்ரிவரைக்கும், சென்னை IIMமிலிருந்து காயல் IIMவரைக்கும், ஒற்ற கொள்கை உடைய JAQHலிருந்து INTJவரைக்கும், முஸ்லிம் லீக்கிலிருந்து மமக வரைக்கும், டாக்டர் ஜாகிர் நாயகின் IIROவிலிருந்து தேவ்பந்து மதரஸாவரைக்கும், இன்னும் ஏன் ஸஹாபாக்களிலிருந்து ஷெக் பின்பாஸ்வரைக்கும், இப்படி பல இருந்து...வரைக்கும் என்று பல நாள் சொல்லும் அளவிற்கு விமர்சனங்களும் விவாதங்களும் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய ஒரே வலைதளம் www.tntj.net எனவே இப்படிபட்ட வலைதளத்தை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமுமுக 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தது. ஆனால் இரண்டுக்குமே தெளிவான காரணம் இருந்தது.

அதிமுகவை விட்டு திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் போது உங்களை போன்றவர்கள் சந்தர்ப்பவாதம் என்று சொல்லவில்லை. காரணம் உங்களைப் போன்றவர்களின் திமுக மீதான தீராத பற்று.

சென்ற திமுக ஆட்சியின் போது, முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். பாஜகவுடன் மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்ட திமுக, அவர்களை குளிர்விக்க தமிழக முஸ்லிம்களை திட்டம் போட்டு கைது செய்தார்கள். இல்லாத பெண்ணை தீவிரவாதி ஆயிஷா என்று வர்ணித்து நம்மூர் பெண்கள் மதராஸாவரை சோதனை என்ற பெயரில் சல்லடையிட்டார்கள். (பின்பு பத்திரிக்கையாளர்கள்தான் ஆயிஷா பெண் தீவிரவாதி என்ற நிழலை நிஜமாக்க முயற்சித்தார்கள் என்று மூத்த போலிஸ் அதிகாரி அசடு வழிந்தது தனி கதை). இந்நிலையில் சீரணி அரங்கத்தில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு நடத்தி அன்றைய எதிர்கட்சிகளை ஒறுங்கிணைத்து திமுக தோற்பதற்கு வித்திட்டார்கள்.

பின்பு வந்த ஜெ.ஜெ ஆட்சியில் அத்துமீறல்கள் நிறைவேற வேறு வழியில்லாமல் திமுகவிற்கு, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டு, 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆதரித்தார்கள்.

பிறகு தமுமுக முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு அடுத்த கட்டத்தை முயற்ச்சி செய்தார்கள். அதாவது கண்ணியமிகு காயிதே மில்லத் வழிகாட்டிய அரசியல் தனித்தன்மை. இந்த அரசியல் தன்மையை தற்போதைய முஸ்லிம் லீக் முன்னெடுத்து சென்றிருந்தால் மமக என்ற கட்சியே உறுவாகி இருக்காது.

உறவாடி கெடுக்கும் கலைஞரின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்டு, சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டும், அரபு நாடுகளில் ஒரு தூதுவர் பதவியும் என்று ஆசை காட்டிய பிறகும், உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை திமுக அழிக்க முயற்சி செய்ததால், தோற்போம் என்று தெரிந்தும், மமக தேர்தலில் தனியாக போட்டியிட்டது.

இன்று தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதித்த காரணத்தால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

தமுமுக செய்யும் இந்த அரசியல் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை அளிக்கும் விதமாகவே அமைகிறது. தமுமுக முதலில் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட ஆரம்பித்த போது, போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள் என்று முஸ்லிம் கட்சிகள் கிண்டலடித்தார்கள். இடஓதுக்கீடு போராடி பெற்றவுடன், விமர்சித்தவர்கள் நாங்கள்தான் இடஒதுக்கீடு பெற காரணமானவர்கள் என்று மார்தட்டுகிறார்கள்.

அதே போல் இன்று தமுமுக, மமக என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து, முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மைக்காக இப்பொழுது போராடுகிறது. இதை நீங்கள் சந்தர்ப்பவாதம் என்று கொச்சைப்படுத்தினால், அந்த சந்தர்ப்பவாதத்தை மீண்டும் மீண்டும் செய்யுமாறு தமுமுக தலைமையை நான் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. ஐந்து வருடத்தில் நாம் பெற்றத்தை கொச்சை படுத்த வேண்டாம்
posted by seyed mohamed (Dammam) [17 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3333

முத்துவாப்பா மற்றவருக்கு அறிவுரை சொல்லும் முன் தான் எவாறு இருக்கிறார் என்று சுய பரிசோதனை செய்து கொள்ளவும்.

நீங்க கண்மூடித்தனமா ADMK சப்போர்ட் பண்ணி எழுதிவிட்டு, கடைசியில் ஜகா வாங்கி நான் ஜெயாக்கு ஒட்டு போடவா சொன்னேன்? என்று பின் வாங்கி விட்டீர்கள்.

முதலில் ஆரம்பம் செய்தது வைத்ததே தாங்கள் தான். யார் நம் சமுதாயத்துக்கு நன்மை செய்ததாலும் பாரட்ட தான் செய்யனும், அல்லது சும்மா இருக்கணும், குறை சொல்லி திரிய கூடாது.

நான் எங்காவது DMK ஒட்டு போடுங்கள் என்று சொல்லி இருக்கிறேனா? என் கருத்து நீங்கள் யாருக்கும் ஒட்டு போடுங்கள் admk தவிர. குறைந்த பட்சம் இந்த ஐந்து வருடத்தில் நாம் பெற்றத்தை கொச்சை படுத்த வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. jaya will never change
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [17 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3337

jaya will never change .pls do watch after this election results. she may change against muslims. be carefull .dog tail will not be norrow.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பூச்சாண்டி
posted by seyed mohamed (damman) [17 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3339

பூச்சாண்டி என்ற வார்த்தை சொல்லி பூச்சாண்டி காட்டி தன கட்சியின் இரட்டை வேடத்தை சமாளிக்கிறார். TNTJ சைட் என்று சொன்னது ஒரு உதாரணம் தான். ஒரு மாற்றம் வேண்டும் என்று சொல்லி ஆரம்பம் செய்து மூன்றை தாண்ட வில்லை .இப்போது தனியாக நிக்க வேண்டியது தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. மாற்றத்தின் முதல் படி
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [17 March 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3345

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்பது போல் கருத்து எழுதாமல் யதார்த்தத்தை எழுதவும்.

60 வருட பெருமை வாய்ந்த முஸ்லிம் லீக்கையே தன் சிறுபான்மை பிரிவாக மாற்றி வைத்திருக்கும் உங்கள் தலைவர் கலைஞரின் சூழ்ச்சியையும் மீறி புதிதாக உறுவாகிய மமக, தனிச்சின்னத்தில் போட்டி இடுவது மாற்றத்தின் முதல் படிதானே?!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இரண்டு சதவிதம்
posted by seyed mohamed (dammam) [17 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3347

லீக் குறை சொல்லிதானே மாற்றம் வேண்டும் என்று கட்சி ஆரம்பிக்க பட்டது? இரண்டு சதவிதம் கூட சீட் வாங்க முடியவில்லை? வாய் பேச்சு வேறு. உங்கள் குறை மறைக்க, லீக் பயன் படுத்தாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. மீட்டர் மேல காசு
posted by mohamed (India) [17 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3348

எவனாக இருந்தாலும் சரி பெட்டிக்கு தான் மதிப்பு ,.அரசிலில் இருக்கும் முஸ்லிம் அல்லது எந்த முஸ்லிம் கழகமாக இருந்தாலும் சரி காசுக்கு தான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Election - 2011
posted by Cnash (Makkah ) [17 March 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3349

பாசக்கார பயலுங்க திமுக இல்லாம இருக்க மட்டோம்லே, இது திமுக ரத்த பாசம்பா ரத்தத்தில் ஊறி கிடக்குது எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா இந்த முஸ்லிம் கூட்டம் ரெம்ப நல்லவன்டா என்று கருணாநிதி சொல்லிட்டு 60 வருஷமா செஞ்சிகிட்டே இருக்கர்லே!!! தொரட்டும் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகத்தில் திருப்பணி!!!!!

கவிமகன் சொல்லி காது கேக்க போவதில்லை, அந்த காவிமகன் அத்வானி உடன் இந்த பாவிமகன் கருணாநிதி கூட்டணி போட்ட போதும் பின் தொடர்ந்த கூட்டம் தான் இது!! விடுங்கப்பா நாங்க என்ன கருணாநிதி ye பத்தி தெரியமாயா இருக்கோம்!! எல்லாம் தெரிஞ்சி தானே தெரியாத மாறி நடிக்கிறோம்!!!

பாரம்பரியம் மிக்க துறைமுகம் தொகுதியை விட்டு கொடுத்து இருக்கராமாம்!!!! உளவுதுறை ரிப்போர்ட் பார்த்து spectrum சுனாமிலே எல்லா (தரு)தலையும் தலைநகரை விட்டு safe ஆனா தொகுதி பார்த்து ஓடிக்கிட்டு இருக்கு!! முஸ்லிம் லீக் காவு கொடுக்க துறைமுகம் கொடுத்து இருக்கார், அது தெரியாத ஆடு கசாப்பு கடை தெரியாம கச்சேரி வச்சிக்கிட்டு இருக்கு !!!!!

சரி ஜெயலலிதா அப்படிதான்!!! கரசேவையே ஆதரிச்சா ஓகே ! அவர் அவருக்கு விசுவாசமான, வோட்டு போட்ட கூட்டத்திற்கு நன்றியை காட்டுனார், காலம் காலமா உனக்கு ஒட்டு போட்டு, சொந்த காசுலே செலவு அழிச்சி வீனா போன எங்க கூட்டத்திற்கு இந்த கருணா என்ன விசுவாசம் காட்டுனார்!!! 1% கூட வோட்டு போடாத நமக்கு அவ செஞ்சதே போதும்!! நீங்க ஒட்டு போட்டு விசுவாசத்தை காட்டுங்க அப்புறம் பேசுங்க!

அந்த ஜெயலலிதா வாஜ்பாய் அரசை கவிழ்த்த அடுத்த செகண்ட் லே அண்ணே எப்போ கிளம்புவார் தின்னே எப்போ காலி ஆகும்டு ...வழிய போய் வசைபாடி பிஜேபி ஒன்றும் தீண்ட தகாதவர்கள் இல்லை, என்று certificate கொடுத்து, கவிழ போன ஆட்சியே தோள் கொடுத்து காப்பதினாரே!! அடுத்த 5 வருஷம் காவி ஆட்சிக்கு காவடி எடுத்து விட்டுதானே இப்போ கதர்க்கு தாவி இருக்கார்!

சும்மா எடுத்ததற்கெல்லாம் ஹதீத் / குர்'அன் என்று போட்டு விளையாடிட்டு இருக்காதீங்க, அங்க ஒன்னும் இஸ்லாமிய ஆட்சியும், சட்டமும் அமுல் படுத்த எலெக்சன் நடக்கவில்லை, ஏன் சாதாரண ஒரு நம்ம பஞ்சாயத்து எலெக்சன்க்கு, நாம ஊரு மக்கள் எல்லாம் சேர்ந்து தலைவியா ரெண்டு தடவை பெண்ணை எலெக்ட் பண்ணவில்லைய!!

நிர்பந்தம் அதுக்காக என்ன எலெக்சன் வேனாம்டு விட்டு இருந்தால் அந்த எடத்துக்கு யாராவது வந்து இருப்போ, அடே லாஜிக் தான் இங்கயும் துரோகியை விட எதிரி நல்லவ!!

இதை எல்லாம் நடுநிலைய உள்ளவங்க விளங்கிப்பாங்க!! விடுங்க!! கலைஞர் பக்திமான்களை தவிர, இருந்தாலும் இதை கேக்கவோ துரோக பட்டியல் போடவோ இந்த தமுமுக கூட்டத்திற்கு எந்த அருகதையும் இல்லை!!

5 வருடம் ஆண்டு அனுபவிச்சிட்டு தானே காலி பண்ணிட்டு போயிர்கீங்க!! சீட் பிரச்சனைக்கு தானே சீட்டை காலி பண்ணிட்டு போனீங்க, எதோ முஸ்லிம் விரோத போக்கை பார்த்து வெறுத்து விட்டு போன மாறி பேசுறாங்கோ!! அந்த 5 வருஷம் அமீருல் மு. .மிநீன் ஆட்சி நடத்திட்டு இன்னைக்கு தான் கருணாநிதி மாறுன மாறி பட்டியல் போட்டு இருக்கீங்க!!

அன்ன்றைக்கு நீங்க கேட்ட 2 பார்லிமென்ட் சீட் கெடைச்சி இருந்த இன்னைக்கு நீங்க தானே துதி பாடுரதில் கி. வீரமணிக்கு போட்டியா இருந்து இருப்பியோ!!! சொந்த மேடையை தவிர மற்ற கட்சி மேடைகளில் ஏறி பிரசாரம் பண்ண மாட்டோம், தனி நபர் துதி படுவது கிடையாது என்றெல்லாம் மேலோங்கி இருந்த தமுமுக வை என்று எல்லோரும் பார்த்து காமெடி பண்ணுற அளவுக்கு கொண்டு வந்தது யாரு?

எப்படியோ மே 15 தேதி க்கு பிறகு சன் டிவி, கலைஞர் டிவியில், ஐயோ கொல்லுராங்கப்பா!! காப்பாத்துங்க சத்தம் மீண்டும் கேக்கலாம் என்று பார்த்தா இந்த ஜெயலலிதா தேர்தல் வரைக்கவது கூட்டணி கட்சியை அரவணைத்து போக மாட்டார் போலே, ஆணவம் இறங்கிய பாடு இல்லை!! பொருத்து இருந்து பாப்போம்!! உப்பை தின்றவன் தண்ணி குடிக்க தானே செய்யணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. மக்களாட்சியை மலரச்செய்வோம்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [17 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3352

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே! கடந்த பத்து நாட்களாக தேர்தல் விசயமாக நீங்கள் எல்லோரும் எடுத்து வைத்த கருத்துக்களை பல பதிவுகளிலும் பார்வையிட்டே வருகிறேன். அவைகளை படிக்கும்போது சிரிப்பதா? சிந்திப்பதா? இல்லை வருத்தப்படுவதா? எதைச் செய்வது என்பது விளங்கவில்லை.

ஆவேசமும், ஆக்ரோஷமும்,கோபமும், தாபமும், சிரிப்பும், சிந்தனையும், வல்லினமும், மெல்லினமும், அறிந்ததும், அறியாததும் இப்படியாக ஏதாவது ஓன்று எல்லோருடைய வாதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.

இதை பதிவு செய்த அனைவருமே உணரலாம், நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால்.
------------------------------------------
நாம் அனைவரும் இந்த கலந்துரையாடலை ஒரு நல்ல எண்ணத்துக்காக தொடங்கினாலும் அது பல திசைகளை நோக்கி பிரயாணித்து, போய் சேரவேண்டிய இடம் அறியாது திசை மாறி, தினறி, தத்தளிக்கிறது. இந்நிலை நீடித்தால் தத்தளித்துக்கொண்டுதான் இருப்போம் குறிக்கோளை அடைய முடியாது.

என்றுமே நம்மிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருந்து, வல்லினம், மெல்லினம் பார்த்து செயல்பட்டோமானால் நாம் அனைவரும் ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றிப்பிடிப்போம், போக வேண்டிய இலக்கை அடைவோம் என்பது திண்ணம்.
-----------------------------------------
இது தேர்தல் நெருங்கிய நேரமாக இருப்பதால் இந்தமாதிரி பல கலந்துரையாடல்களும், வாதங்களும் ஏற்படும். இதில் நல்ல கருத்துக்களை எடுத்து படிப்பினைப் பெறலாமே தவிர, இதனால் நாம் உடனே எந்த மாற்றத்தையும் தந்து விட முடியாது ஏனென்றால் கால அவகாசமில்லை.

அதுமட்டுமில்லாமல் இது சட்டசபைக்கானத் தேர்தல் தொகுதி முழுவதையும் சுற்றிவளைத்து அவர்களின் கவனத்தை குறுகிய காலத்தில் திருப்புவது என்பது சாதாரண விசயமல்ல. ஆனால் இது நகரசபைத் தேர்தலாக இருக்குமானால் இன்ஷா அல்லாஹ்! நம் நாட்டத்தை நிறை வேற்றலாம்.
-----------------------------------------
மக்களே!

இந்த சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் நாம் அனைவரும் எங்கிருந்தாலும் ஒன்றுபட்டு, ஒரு பிரயோசனமான கலந்துரையாடலை தொடங்கி நமது நகராட்சி தேர்தலுக்கு நல்லதொரு குழுவைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாக வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்! வரும் அக்டோபரில் நகராட்சிக்கு தேர்தல் வருகிறது, இந்த முறை நாம் ஏமார்ந்தோமானால் இனி வரும் காலங்களில் செயல்படுவது மிக, மிகக் கடினம்.

எனவே மக்களே! இப்பொழுதே அதற்குண்டான ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாக வேண்டும்.

இலட்சக்கணக்கான ஓட்டுகள் உள்ள, பல ஜாதி, மதங்களை கொண்ட சட்டசபைத் தொகுதிக்கே ஒன்றுபட்டு நின்று ஒரு நபரை போட்டியிட வைக்க விரும்பும் நமக்கு வெறும் ஆயிரம் ஓட்டுகள் கொண்ட அதுவும் நம் மாமன், மச்சான்கள் இருக்கிற வார்டில் ஒரு நல்ல மனிதரை நிறுத்தி வெற்றிக்கொள்ள முடியாதா?

நல்ல மனிதர்களை, இறைவனுக்கு பயந்த, சுறுசுறுப்புள்ள மனிதர்களை வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து நமது நகராட்சியில் மக்களாட்சியை மலரச்செய்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. கிண்டல் செய்ய வேண்டாம்
posted by safik (buraida) [18 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3369

நம் ஊரில் இரண்டு முறை பெண்கள் தலைவியா ஆனா, மார்க்கம் வளைந்து கொடுக்கனுமா? இஸ்லாமிய ஆட்சிக்கான தேர்தலா இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், நாம் முடிந்த வரை ஒன்று மார்க்கம் தடை செய்தால், நம் பலம் கொண்டு தடுக்கணும், முடியா விட்டால் கை கொண்டு தடுக்கணும், அதுவும் முடியாவிட்டால் வாய் கொண்டு தடுக்கணும், இல்லாவிட்டால் மனத்தால் தடுக்கனும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved