பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வுகள் 02.03.2011 அன்று துவங்கி தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காயல்பட்டினம் நகரில் எல்.கே.மேனிலைபள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படுகின்றன.
எல்.கே.மேனிலைப்பள்ளியில் அப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மற்றும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் அப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
25.03.2011 தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிவுறும். பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, மாணவர்கள் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை சிறப்புத்) தொழுகையில் கலந்துகொள்ளும் பொருட்டு நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அஹ்மத் சுலைமான்,
முதுநிலை ஆசிரியர்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |