சிங்கப்பூர் ஜாமிஆ சார்பில் வரும் 19.03.2011 சனிக்கிழமையன்று இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி மீலாத் விழா நடத்தப்படவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அதன் செயலர் ரஷீத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது சிங்கப்பூர் ஜாமிஆ சார்பில், இன்ஷாஅல்லாஹ் வரும் 19.03.2011 சனிக்கிழமையன்று மதியம் 03.30 மணிக்கு மீலாத் விழா நடத்தப்படவுள்ளது. ஜாமிஆவின் பணிகளுக்கு ஒத்துழைப்பளிக்கும் வகையில், இவ்விழாவில் நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் நம் மன்ற உறுப்பினர்களை சிங்கப்பூர் Bedok & Lavender ஆகிய பகுதிகளிலிருந்து, விழா நடைபெறும் Woodlands Stadium வரை அழைத்துச் செல்வதற்காக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் இடத்தில் சரியாக மதியம் 03.00 மணிக்கு அனைவரும் சென்று சேர்ந்திட வேண்டும் என்ற அடிப்படையில் 02.30 மணிக்கு அனைவரையும் அழைத்துச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளதால், உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் சென்று ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். வாகனங்களின் சரியான நிறுத்துமிடம் குறித்து வரும் வியாழன் அல்லது வெள்ளியன்று உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அதே நேரம், சிங்கப்பூர் Toa Payoh, Bishan, Ang Mo Kio, Hougang, Bukit Batok ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் காயலர்கள் விரும்பினால் இந்த வாகன வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும், Woodlands MRT மூலம் செல்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்க விரும்புகிறோம். Woodlands MRTயிலிருந்து விழா நடைபெறும் Woodlands Stadium 5 நிமிட நடைதூரம் மட்டுமே என்பதால் இந்த ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்த இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |