இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) மூலம் இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் இன்று (மார்ச் 16) முதல் விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30.
சென்ற ஆண்டு வரை இருமுறை விண்ணப்பங்கள் நிரப்ப வேண்டி இருந்தது. இவ்வாண்டு இது மாற்றப்பட்டு, ஒரே விண்ணப்பம், இரு நகல்களாக (ஒன்று தமிழ் நாடு ஹஜ் குழுவுக்கும், ஒன்று மத்திய ஹஜ் குழுவுக்கும்) சமர்பிக்கபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தலைவராக (Head of Cover) ஆணே இருக்க வேண்டும். ஒரு விண்ணப்பத்திற்கு ஐந்து பெரியோரும், இரண்டு குழந்தைகளும் இருக்கலாம். தலைக்கு 200 ரூபாய் என கூடுதலாக 1000 ரூபாய் வரை விண்ணப்ப பரிசீலனை தொகையாக (Processing Fee) சமர்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விண்ணப்ப பரிசீலனை பணம் கிடையாது.
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம் செய்பவர் பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாஸ்போர்ட் விண்ணப்பித்த ரசீது வைத்திருக்கவேண்டும்.
குலுக்கலில் தேர்வாவோர் ஜூன் 15 க்குள் தங்கள் பாஸ்போர்டினை ஹஜ் குழுவிடம், ரூபாய் 31,000 கட்டியதற்கான ஆதாரத்துடன் (Pay in Slip) சமர்பிக்கவேண்டும்.
தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்தவற்கும், சென்ற ஆண்டு தேர்வு செய்யப்பட்டு முழுதொகையை செலுத்தி, பாஸ்போர்ட் அல்லது விசா கிடைக்காத காரணத்திற்காக பயணம் மேற்கொள்ள முடியாமல் போனவருக்கும், தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விசா கிடைக்காமல் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலதிக விபரம் காண இங்கு அழுத்தவும்
|