சில தினங்களுக்கு முன், காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் பனிமூட்டம் போன்றும், நெருப்பெரியும் புகைமூட்டம் போன்றும் காட்சி தென்பட்டது.
அருகில் சென்று பார்த்தபோதுதான் அச்சாலையில் வடமுனையில் பழுதடைந்த பகுதிகளில் ஒட்டு போடுவதற்காக காற்றூதி கருவியைக் கொண்டு தூசுகளை அகற்றிக் கொண்டிருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது.
காயல்பட்டினத்தில் புதிய சாலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
1. தலைப்பு சூப்பர் posted byM.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.)[10 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3147
ஹஹ்ஹ ஹஹ்ஹா....தலைப்பு சூப்பர் இதுக்கு ரூம் போட்டு யேசிப்பீங்களோ...ஹஹ்ஹ ஹஹ்ஹா...
2. சிந்திப்போம், ஒன்று சேர்வோம், செயல்படுவோம் posted bymauroof (Dubai)[10 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3155
சாலைகளின் மத்தி மற்றும் இரு புறமும் தேவை அற்ற மணல் & கற்கள் தேங்காதவாறு பார்த்து கொண்டாலே போடப்படும் மற்றும் போடப்பட்டிருக்கும் சாலைகளின் தரம் சற்று நீடிக்கும்.
மேலும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் தூசிகளை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இதற்கு பொறுப்பு அந்தந்த பகுதி மக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம்.
3. BE CAREFUL (நான் என்னை சொன்னேன் )... posted byமுத்துவாப்பா...... (al khobar)[10 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3168
தலைப்ப பார்த்ததுமே ஏதோ வித்தியாசமா இருக்குனு ஒபன் பன்னினதுமே என் கண்ணுல பட்டது அந்த போட்டோ தான். நான் அந்த போட்டவ பார்த்துட்டு ஏதொ சுதந்திரம் கிடைக்கிறதுக்கு முன்னாடி (1947) உள்ள போட்டோ போலனு நினைச்சுட்டு அப்படியே செய்திய படிச்சா அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்...!! பின்ன என்னங்க இந்த விஞ்ஞான காலத்துல இப்படி இவங்க பண்ணுற கூத்த பார்த்தா சிரிக்காம என்ன பன்ன முடியும் . இப்படி நான் எதைவாது சொன்னா நீங்க மொட்டயா சொல்லாதீங்க முடி வச்சிட்டு சொல்லதீங்கனு உடனே ஒருத்தர் கருத்து சொல்ல வந்திடுவாரு.ஓகே நான் மேட்டருக்கு வரேன், காயல் மக்களே உஷார இருங்க ஊர்ல ஒரு குருப்பே கேமராவோட சுத்திட்டு இருக்கு....நீங்க அதுல மாட்டினீங்க அடுத்த நாள் தலைப்பு செய்தி நீங்க
தான்... SO BE CAREFUL (நான் என்னை சொன்னேன் )
5. Dust pollution posted byHusain Noorudeen (Abu Dhabi)[10 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3179
ஸாலிஹ்,
இந்த புகைப்படத்துல தெரியுற வீட்டுக்காரங்க அவங்க வீட்டு மேல தூசி படிஞ்சிடுச்சுன்னும், புதுசா பெயின்ட் அடிக்க காசு வேணும்னும் கேக்குறாங்கப்பா. ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா.
6. ஹுஸைன் காக்கா அனுப்புவார் என்று சொல்லியிருக்கிறேன்! posted bySK Salih (Kayalpatnam)[10 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3180
சம்பந்தப்பட்ட அந்த வீட்டில் தூசி படிந்ததைக் கவலையுடன் கண்ணுற்ற துபைவாழ் ஹுஸைன் நூருத்தீன் என்ற சகோதரர் இனி இதற்காகவும் சேர்த்து பணம் அனுப்புவார் என்று அந்த வீட்டாரிடம் சொல்லியிருக்கிறேன்.
8. ” குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்.” posted byM.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிபாத்) (புனித மக்கா.)[11 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3194
இருந்தாலும் எஸ்.கே.சாலிஹ்க்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்.அந்த வண்டியும்,மண்வெட்டியும் இல்லைன்னா ஏதோ கொசு மருந்து அடிக்கிறாங்கன்னு ஒரு தலைப்பை போட்டிருப்பார். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம்,சாலையில் ‘சிக்கன்65’, இத மத்த நாடுகள்லயும் ஃபாலோ பண்ணி பார்க்கலாமே!!இது போன்ற தலைப்புகளுக்கு மனுஷன் ரூம் போட்டு யோசிப்பாரோ?என்னவோ? எப்படியோ...?நாம் ரசிக்கும் படி இருக்கு! கீப் இட் அப்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross