தமிழ் பேசும் குடும்பங்களுக்கான மாதாந்திர இஸ்லாமிய நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 25 அன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் - சுளை பகுதியில் - உள்ள இஸ்திரஹா லயலி அல்-ஒமர் என்ற இடத்தில நடைபெற்றது. இதில் காயலர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனுசரணை சுஆலி தாவா மையம் செய்திருந்தது.
நிகழ்ச்சிகள் ஜும்மா பயானுடன் மதியம் 12 மணி அளவில் துவங்கின. ஜும்மா உரையினை மௌலவி முனவர் மகிழ்ச்சியான வாழ்விற்கு இஸ்லாம் காட்டும் வழிக்காட்டுதல் என்ற தலைப்பில் வழங்கினார்.
தொழுகையை தொடர்ந்து ரியாத் Security Forces Hospital இல் பணிபுரியும் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் ஷஹீத் பங்குப்பெற்ற சிறப்புரை மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் எல்லாவயதினரும் பங்குபெற்ற கால்பந்தாட்ட விளையாட்டுக்கள் நடைப்பெற்றது.
விளையாட்டுக்களை தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.
தனியாக பெண்களுக்கான நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. அவர்களுக்கான மாதந்திர கேள்விகள் வழங்கப்பட்டன.
அஸர் தொழுகைக்கு பின்னர் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு மௌலவி தலைமையில் குழுவுக்கு 8 பேர் கொண்ட, 10 குழுக்கள் பங்கேற்றன. இதில் உணவு உண்ணும் முறையும், அவ்வேளையில் ஓதவேண்டிய துவாக்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன.
கருணைக்கடல் ரசூலுல்லா என்ற தலைப்பில் மௌலவி ரம்ஜான் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் மௌலவி ரம்சான் பாரிஸ் மதானி மற்றும் மௌலவி முஆத் - ஒரு குழுக்கு ஐந்து பேர் என்ற கணக்கில் - அறிவு களஞ்சியம் நிகழ்ச்சி நடத்தினர். பெண்கள் அணி வெற்றிப்பெற்றது.
மஸ்ஜிதுல் கப்பாருடன் நிகழ்ச்சிகள் இரவு 8 மணி அளவில் நிறைவுப்பெற்றது.
அடுத்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1 அன்றும் நடைபெறும்.
தகவல்:
அபு அஹமத் (சோனா) [காட்டு தைக்கா தெரு],
ரியாத், சவுதி அரேபியா. |