செய்தி: துளிர் பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு மனித சங்கிலி! பள்ளி-கல்லூரிகளின் மாணவ-மாணவியர் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாற்றும் திறனாளிகள்.. posted bymackie noohuthambi (kayalpatnam)[09 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31899
மனித சங்கிலி பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் அவர்களை அங்கீகரிக்கும் அல்லது கௌரவிக்கும் பொது மேடையில் ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்களை அதிகம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் அடிமனதில் வந்து செல்வதை இங்கு பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவும் கூட ஒரு கண்துடைப்பாகவே இருந்தது என்று தி ஹிந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. என்ன செய்ய முடியும், மக்கள் மனதிலே அந்த உணர்வு, இறைவன் நம்மை சகல வசதிகளுடனும் படைதிருக்கிறானே என்று அல்லாஹ்வை புகழ்ந்து இவர்களுக்காக துஆ செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இவர்களுக்காக தங்களை மெழுகுவர்த்திகளாக ஆக்கிக்கொண்டு அல்லும் பகலும் பாடுபடுபவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த துளிர்பள்ளி ஓங்கி வளர வேண்டும் என்று வாழ்த்த எனக்கு மனம் வரவில்லை. இப்படி பிள்ளைகள் இனி பிறவாதிருக்க அருள்புரிவாய் என்றுதான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று வள்ளலார் சொல்வதுபோல இந்த பிள்ளைகளை பார்க்கும்போதெல்லாம் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. கண்கள் பனிக்கின்றன. அல்லாஹ்வின் படைப்பை யார்தான் குறை சொல்ல முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross