எது கூடா நடப்பு? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 December 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31902
அன்புள்ள நூஹுதம்பி காக்கா அவர்களே, நீங்கள் பல கருத்து சோலையில் புகுந்து பலதரப்பட்ட கருத்துக்கனிகளை பருக தந்திருக்கிறீர்கள். அதில் பரவசம் அடைந்தவனில் நானும் ஒருவன். சில சமயங்களில் அது புளிக்குமா, இனிக்குமா என்று கூட சற்று சோதிக்காமல். புளிக்கும் பழத்தையே தந்து விடுகிறீர்கள்! மேலே கண்ட உங்கள் கருத்துகூட கனியாமல் காயாக கசந்து காணப்பட்டது!
உங்கள் கூற்றுப்படி.....
பணம் கொடுத்து வாங்கிய வெற்றி என்கிறார். வாதத்துக்காக அதை ஏற்றுக் கொண்டாலும், அந்த சூட்சுமத்தை கற்றுக் கொடுத்த குருநாதர் - திருமங்கல திருமந்திரத்தை ஜபிக்க கற்றுக் கொடுத்த பிதாமகன் நீங்கள்தானே, கலைஞரே, தமிழின தலைவரே என்று மக்கள் உங்களை திருப்பி கேட்கிறார்களே, நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்.(C &P )
முதன் முதலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கிய பிதாமகள் யாரென்றால் சாட்த் ,சாத் உங்கள் புரட்சித்தலைவி ,செல்வி, அம்மா ஜெயலலிதா அவர்கள் தான்! அந்த கலாச்சரத்திற்கு கால்கோல் நாட்டியது சாத்தான்குள இடைத்தேர்தலில்தான் என்பதை அதிகார பூர்வமாக நிரூபிக்க பல சம்பவங்கள் சான்றாக உள்ளது. சற்று கவனத்துடன் வார்த்தையை கையாளுங்கள் அன்பு சகோதரரே!
தி.மு.க பெற்ற வெற்றி பணமே கொடுக்காமல் பெற்ற வெற்றிகள் என்று நான் வாதாட வரவில்லை. ஜெயலலிதா போன்றோருக்கு அவர் நிலைக்கேற்ப கலைஞர் பதில் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதான்!
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தவுடன் வேக, வேகமாக முதலில் எங்கு விரைந்து ஓடோடி வருகிறார், தன்னுடைய கட்சி பலமாகவும், பிரகாசமாக்கவுமுள்ள மாநிலத்திற்கா வருகிறார் இல்லை, இல்லை, நேராக தமிழகதிற்கு வருகிறார். அதுவும் ஒரு தடவைக்கு இரு தடவை. அவர் வரும் நாளில் அருகிலுள்ள அனைத்து கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்படவேண்டும் என்ற மறைமுக அரசு ஆணை!
தனக்கு பிடித்த முதல்வர், சுமார் 50 வகையான ருசியில் மிஞ்சிய உயர்தர உணவு வகைகளை உள்ளமகிழ்வுடன் விருந்து படைத்த தமிழக முதல்வரின் ஊருக்கல்லவா உவகையுடன் வருகிறார் மோடி.
நரேந்திர மோடி முதல்வராக வெற்றிப்பெற்ற்வுடன், அனைத்து முதல்வர்களையும் முந்திக்கொண்டு, தமிழகத்திலிருந்து முதன்முதலாக சென்று மேடையில் மலர் சிரிப்புடன் வாழ்த்து தெரிவித்தவர் புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்கள்தான்!
சென்ற 2004-லில் தி.மு.க.ஆட்சியைபிடித்து வெற்றியைப் பெற்ற அன்று, இன்றைய முதல்வர், அவர் வீட்டு மாடியில் இருந்து தன் தொண்டர்களுக்கு என்ன அறைகூவல் இட்டார் தெரியுமா? தமிழகத்தில் தீய சக்தி ஆட்சிக்கு வந்து விட்டது அதுவும் மைனார்டி அரசாகத்தான் அமையப்போகிறது, அதுவும் எத்தனை நாளுக்குத்தான் ஓடப்போகிறது என்று தெரியாது.அதனை ஆணி வேருடன் தூக்கியெறிய இன்றுமுதல் சூளுரையுங்கள் என்று வெறி வசனம் பேசியவர்தான் இன்றைய முதல்வர்!
ஒரு மத வாத சக்தியிடம் மறைமுகமாக ஆதரவு அளித்துவரும் ஒரு முதல்வரை எதிர்க்கவும், தற்போதைய ஆட்சின் அவலத்தால் அவதியுறும் மக்களை மீட்கவும், ஒட்டு மொத்தமாக எல்லோரும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தாருங்கள் இதில் எங்கள் கொள்கையில் உடன்பாடில்லா எதிர் கருத்துடையவர்களும், ஒரு பொது எதிரியை வீழ்த்த எங்களக்கு உதவுங்கள் என்ற கருத்தில் அழைக்கும் ஒரு தலைவர், தனக்கு ஒத்துழையுங்கள் என்று அழைப்புவிடும் அத்தனை கட்சிகளுடன் கொஞ்சி குலாவி கூடும் நட்புடன் நெஞ்சனையோடு இணைத்துவிட்டார் என்று முடிவெடுக்கும் உங்களைப் போன்றோர்களின் சித்தாந்தம் எந்த சிந்தனையின் திசையில் செல்கிறது என்பதை எண்ணி உண்மையில் வேதனை அடைகிறேன்!
அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross