Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31959
இக்கூட்டம் நல்லபடி ஒற்றுமையாக நடந்து முடிய வாழ்த்துக்கள்...!
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாத சாதாரண கூட்டத்தை, நவம்பர் 15 நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. அன்று அரசு விடுமுறை என்பதால், அக்கூட்டம் நவம்பர் 19 என மாற்றப்பட்டது. செலவு விபரங்கள் உட்பட பல தகவல்கள் முழுமையாக இணைக்கப்படாததால், நவம்பர் 19 அன்று நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தை, நகர்மன்றத் தலைவர் ஒத்திவைத்தார். CP
அன்று என்ன காரணத்திற்காக இக்கூட்டம் ஒத்திவைக்கபட்டதோ.. அக்காரணம் நகரமன்ற ஊழியர்களால் சரி செய்யப்பட்டு அவை தற்போது வரவு - செலவு விபரங்கள் உட்பட பல தகவல்கள் முழுமையாக இணைக்கப்பட்டு நகரமன்ற தலைவர் - துணை தலைவர் - மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு முன் தாக்கல் செய்ய பட்டுவிட்டதா...? அது என்ன விபரங்கள்...? அது என்ன தகவல்கள்...? அத்தகவலை நகராட்சிக்கு வரி செலுத்தி வரும் பொது மக்கள் அனைவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் விதமாக வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross