காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பின்வரும் 68 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன:-
கடைசியாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் - செப்டம்பர் 27 அன்று துவங்கி மூன்று
நாட்களாக, நான்கு அமர்வுகளில் அக்டோபர் 1 வரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி
நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாத சாதாரண கூட்டத்தை, நவம்பர் 15 நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. அன்று அரசு விடுமுறை
என்பதால், அக்கூட்டம் நவம்பர் 19 என மாற்றப்பட்டது. செலவு விபரங்கள் உட்பட பல தகவல்கள் முழுமையாக இணைக்கப்படாததால்,
நவம்பர் 19 அன்று நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தை, நகர்மன்றத் தலைவர் ஒத்திவைத்தார்.
தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|