டிசம்பர் 14ஆம் தேதியன்று தேசிய எரிசக்தி சேமிப்பு நாளாகும். இதனை முன்னிட்டு, இம்மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் எரிசக்தி சேமிப்பு குறித்து பரப்புரை செய்யப்பட்டது.
ஆலையையொட்டிய திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலை வழியே சென்ற பேருந்துகளையும், இதர வாகனங்களையும் நிறுத்தி, அதிலுள்ள பயணியருக்கு - எரிசக்தி சேமிப்பு தொடர்பான விபரக் குறிப்புகள் அடங்கிய பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
ஆலை நிர்வாகத்தின் துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இப்பரப்புரையில் பங்கேற்றனர்.
|