சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 75-ஆவது செயற்குழு கூட்டம் சென்ற 06.12.2013 வெள்ளிக்கிழமை மஃரிபுக்குப்பின் மன்றத்தலைவர் சகோ,குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் இல்லத்தில் நடந்தேறியது.
மன்றத்துணைத்தலைவர் மருத்துவர் சகோ.எம்.எ.முஹம்மது ஜியாது முன்னிலை வகிக்க, மன்ற மூத்த ஆலோசகர் பொறியாளர் சகோ.எஸ்.செய்யிது பஷீர் தலைமை தாங்க, துணைப்பொருளாளர் சகோ.எம்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல்காதிர் கிராஅத் ஓத, பொறியாளர் சகோ.எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றார்.
மன்ற செயல்பாடுகள் குறித்த செய்திகளை மன்றச்செயலர்களான சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யிது மீரான் மற்றும் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் ஆகியோர்; “மன்றம் இதுவரை வழங்கியி உதவிகளின் விபரம், பயனாளிகளின் பிரார்த்தனைகள், நாம் மனமுவந்தளிக்கும் சிறு தொகை மூலம் நம் மன்றம் செய்த, செய்யும் மகத்தான நலப்பணிகள், நாம் சந்தாக்களை தாமதமின்றி விரைந்தளித்து நம் பணிகளை இன்னும் வீரியமாக்குதல், இக்ரஃ கல்விச்சங்கத்திற்கு நம்மன்றமும் முறையே SCHOLARSHIP வழங்க உரிய ஏற்பாடுகளை செய்தல், நம் மன்றப்பணிகள் தொய்வின்றி இனிதே நடந்தேற யாவரின் மேலான பிரார்த்தனையும் வேண்டல்...” என்று மன்றத்திற்கான அனைத்து செய்திகளையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறினர்.
மன்றத்தின் இருப்பு, விடுப்பு, தேவை சம்பந்தமான நிதி நிலைகளை விபரமாகச்சொன்னார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
இக்ரஃ கல்வி கூட்டமைப்பு, ஷிபாஃ மருத்துவ கூட்டமைப்பு மற்றும் காயல் நலமன்றங்களின் செயல்பாடுகள் குறித்த உறுப்பினர்களின் கலகலப்பான கலந்துரையாடல் நிகழ்வு மிகச்சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும், அறிவார்ந்த கருத்துக்களை கொண்டதாகவும் இருந்தது. அவ்வமயம்; நம் நகரில் அண்மையில் உருவான மருத்துவ கூட்டமைப்பு “ஷிஃபா” குறித்து பலதரப்பட்ட நற்ருத்துக்கள் பரிமாறப்பட்டன. அவ்வமைப்பின் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும், அவ்வமைப்பு மேலும் நலமே இயங்கி நம் நகரில் பிணிகள் இல்லாமையை உருவாக்கி இறைவைனின் திருப்தியை பெறவும் பிரார்திக்கப்பட்டது.
“ஷிபா” மூலம் பெறப்பட்ட மருத்துவ பயனாளிகளின் விண்ணப்பங்கள் முறையே வாசிக்கப்பட்டு மருத்துவர் முஹம்மது ஜியாது அவர்களின் ஆலோசனைப்படி, HEART, CANCER, BRAIN DISEASE மற்றும் தொடர் சிகிட்சை வகைக்காக 09 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தலைநகர் ரியாதிலிருந்து பணி மாற்றலாகி ஜித்தா வந்திருக்கும் ரியாது காயல் நற்பணி மன்றதின் செயற்குழு உறுப்பினர்களான சகோ.ஆதம் அபுல்ஹசன் மற்றும் சகோ.வி.எம்.எ.மொஹ்தூம் அமீன் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாக கலந்து தமது கருத்துக்களை அழகாக எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இக்ரஃ கல்வி கூட்டமைப்பின் அன்பு வேண்டுகோளை ஏற்றும், இவ்வமைப்பின் நடப்பாண்டு தலைவராக பொறுப்பு வகிக்கும் எம்மன்றத்தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பூரண ஆலோசனைப்படியும், இக்ரஃவின் SCHOLARSHIP வகைக்கு 16 மாணவர்களுக்கு மூன்றாண்டு படிப்புக்கான உதவிகள் நம் மன்றம் மூலம் வழங்கிடவும், அதன் விபரங்களை இக்ரஃவிற்கு விரைந்தளித்திடவும் முடிவு செய்யப்பட்டது.
2. நம் நகர் மக்களின் தேவையறிந்து உலக காயல் நலமன்றங்களின் உதவிப்பாதையில் புதிதாக இணைந்திருக்கும் மலேசியா காயல் நல மன்றம், அதன் சேவைகளை செவ்வனே துவங்கி மக்களின் துயர் துடைக்க இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறது இம்மன்றம்.
3. மன்றத்தின் 76வது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 10 ஜனவரி 2014 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் இந்நிகழ்விற்கான அனுசரணை வழங்கிட, சகோதரர்கள் சட்னி எஸ்.எ.கே.முஹம்மது உமர், பொறியாளர் ஜி.எம்.முஹம்மது ஸுலைமான் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
சகோ.பிரபு எஸ்.ஜே.நூருதீன் நெய்னா பிரார்திக்க, துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
06.12.2013.
|